மால்டா, மேற்கு வங்காளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மால்டா (Malda or English Bazar) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில் உள்ள மால்டா மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.[7]மகானந்தா ஆற்றின் கரையில் அமைந்த மால்டா நகரம், இங்கிலீஷ் பஜார் நகராட்சி மற்றும் பழைய மால்டா நகராட்சிப் பகுதிகளை இணைத்து நிறுவப்பட்டது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மால்டா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,89,533 ஆகும் அதில் இங்கிலீஷ் பஜார் நகராட்சியின் மக்கள் தொகை 2,05,521[8]ஆகவும், பழைய மால்டா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 84,012 ஆகும்[9] இங்கிலீஷ் பஜார் நகராட்சியில் இந்துக்கள் 86.95%, இசுலாமியர்கள் 11.02%, மற்றவர்கள் 3.03% ஆக உள்ளனர்.[10]
புவியியல்
அமைவிடம்
மேற்கு வங்காளத்தில் வடக்கில் மால்டா நகரம் 25.0119°N 88.1433°E பாகையில் அமைந்துள்ளது. [11]இது மகானந்தா ஆற்றின் மேற்கு மற்றும் கிழக்கு கரையில்களில் உள்ளது.
தட்ப வெப்பம்
மால்டா நகரத்தின் கோடைக் காலத்திய உயர் வெப்பம் 42° செல்சியஸ் ஆகவும், குளிர்காலத்திய குறைந்த வெப்பம் 3.9° செல்சியஸ் ஆகும். ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,554 mm (61.2 அங்) ஆகும்.

Remove ads
போக்குவரத்து
இருப்புப் பாதை

மால்டா நகரத்தில் 4 தொடருந்து நிலையங்கள் உள்ளது. பழைய மால்டா நகர தொடருந்து நிலையம், மால்டா தொடருந்து நிலையம், மால்டா கோர்ட் தொடருந்து நிலையம், கௌர் மால்டா தொடருந்து நிலையம் என நான்கு தொடருந்து நிலையங்கள் உள்ளது.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads