மாவிளக்கு வழிபாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடித்தெடுத்த பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும்.[1] இந்த மாவிளக்கு வழிபாடு சாக்த சமயத்தின் முழுமுதற் கடவுளான அம்மனுக்கு செய்யப்படுகிறது. மேலும் குலதெய்வங்களேக்கும், விநாயகர், பெருமாள் போன்ற பிற கடவுள்களுக்கும் இந்த மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது. இந்த வழிபாட்டினை மாவிளக்கு ஏற்றுதல், மாவிளக்கு பார்த்தல் என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Remove ads
மாவிளக்கு வழிபாடு

பச்சரிசி மாவு, வெல்லப் பாகு கலந்து மாவு உருண்டையாக செய்கின்றனர். இதில் வாசனைக்காக ஏலக்காய் சேர்ப்பதும் உண்டு. திரண்ட மாவினை நீள் உருண்டையாகப் பிடித்து, அதன் மேல் எண்ணெய் ஊற்ற குழியாக செய்கின்றனர். அதில் நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை ஊற்றி திரியிட்டு விளக்கேற்றுகின்றனர்.
மாவிளக்கு ஊர்வலம்
திருவிழா சமயங்களில் அவரவர் வீட்டில் செய்யப்பட்ட மாவிளக்கு ஊர்வலமாக அம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.
நோய் தீர்க்க வேண்டுதல்
தலைவலி, கால் வலி, கை வலி, உடல் வலி உள்ளிட்டவற்றால் அவதிப்படக்கூடிய பக்தர்கள், அதிலிருந்து விடுபட மாவிளக்கு ஏற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்த பகுதியில் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறார்களோ, அந்த பகுதியில் மாவிளக்கை ஏற்றி வழிபடுகிறார்கள். அப்படி மாவிளக்கு ஏற்றி வழிபடும் போது அம்மன் தங்களது நோய்களை குணப்படுத்துவதாக நம்புகின்றனர்.[2][3]
அவ்வாறான வேண்டுதல்களின் போது நோயுற்றவரை படுக்க வைத்து மாவிளக்கை வாழை இலையின் மீது வைத்து கண்கள், கைகள், மார்பு, வயிறு உறுப்புகளின் மீது வைக்கின்றனர். மாவிளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரியிட்டு விளக்கேற்றுகின்றனர்.
மாவிளக்கை தீயுடன் உண்ணுதல்
தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புள்ளான்விடுதி கற்பக விநாயகர் கோயிலில் மார்கழி மாதத்தில் சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் விநாயகருக்கு விநாயகர் நோன்பு என்ற விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது இருபது நாட்களுக்கு விநாயகருக்கு பிடித்த உணவுகளை படைக்கின்றனர். இருபத்தி ஒன்றாம் நாளில் இதுவரை படைத்த அனைத்து உணவுகளையும் ஒரு சேர படைக்கின்றனர்.
அந்நாளில் விநாயகருக்கு தீபாராதனை முடிந்தவுடன், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் தீயுடன் கூடிய மாவிளக்கை உண்கின்றனர். இந்த வழிபாடு வேறெங்கும் காணமுடியாத தனித்துவமாக விளங்குகிறது.[4] இதனை திரிப்பழம் உண்ணுதல் என்கின்றனர்.[5]
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads