மாவீரர் நாள் உரை
பிரபாகரன் மாவீரர் நாளில் ஆற்றிய உரை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாவீரர் நாள் உரை (Maaveer Day Speech) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் 2008-ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளன்று உரைக்கப்பட்டது.[1][2][3] உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்களால் மட்டுமன்றி தமிழீழ விடுதலையில் நாட்டம் கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், இலங்கை அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாக இருந்தது.

Remove ads
பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2003
பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2004
பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2006
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2006 மாவீரர் நாள் உரையில் "சிங்களப் பேரினவாதத்தின் கடும் போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு எனும் தீர்வினை தவிர வேறு ஒரு தெரிவினையும் விட்டு வைக்கவில்லை " என்றார். இந்தக் கூற்று விடுதலைப் புலிகள் நோர்வே அரசின் அனுசரணையுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த பேச்சுவார்த்தைகளிலும் போர்நிறுத்தத்திலும் இருந்து விலகி போருக்கான அறிவிப்பாகவே கருதப்படுகின்றது. எனினும் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையான 2002 போர்நிறுத்தத்தில் இருந்து தாம் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அவர் இங்கு அறிவிக்கவில்லை.
பிரபாகரனின் மாவீரர் நாள் உரை, 2008
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads