மிசிசாகா

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

மிசிசாகா
Remove ads

மிசிசாகா (Mississauga /ˌmɪsɪˈsɔːɡə/ (கேட்க)[3] என்பது கனடிய மாகாணமான ஒண்டாரியோவின் ஒரு நகரமும், தொராண்டோ மாநகரின் ஒரு புறநகரும் ஆகும். இது ஒண்டாரியோ ஏரியின் கரையோரப் பகுதியில் பீல் மாநகரசபையில் தொராண்டோவின் கிழக்கே அமைந்துள்ளது. 2016 கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 721,599 ஆகும். இது கனடாவின் ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும், ஒண்டாரியோவின் மூன்றாவது பெரிய நகரமும், தொராண்டோ பெரும்பாகத்தின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.[1][4]

விரைவான உண்மைகள் மிசிசாகா Mississauga, நாடு ...

தொராண்டோவிற்கு அருகாமையில் இருப்பது மிசிசாகாவின் வளர்ச்சிக்கு காரணம் ஆகும்.[5] 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நகரம் பன்முக கலாச்சார மக்களை ஈர்த்தது. இது ஒரு செழிப்பான மைய வணிகப் பகுதியை உருவாக்கியது.[6][7] கனடாவின் பரபரப்பான விமான நிலையமான தொராண்டோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கு உள்ளது. அத்துடன், பல கனடிய, பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகமாகவும் மிசிசாகா விளங்குகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads