மிட்டா மிராசு
மு. களஞ்சியம் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிட்டா மிராசு (Mitta Miraasu) 2001 ஆம் ஆண்டு பிரபு, நெப்போலியன், ரோஜா மற்றும் மும்தாஜ் நடிப்பில், மு. களஞ்சியம் இயக்கத்தில், அஸ்லம் முஸ்தபா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[2][3].
Remove ads
கதைச்சுருக்கம்
செல்லையா (பிரபு) தன் வாழ்க்கையில் இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளார். முதல் நோக்கம் தன் குடும்பத்தின் மீது கூறப்படும் அவப்பெயரைக் களைவது, இரண்டாவது நோக்கம் தன் தம்பியை (ரவி ராகுல்) வழக்கறிஞராக படிக்க வைப்பது. அவன் வழக்கறிஞராக ஆனால் மட்டுமே தன் வீட்டு அவப்பெயரைக் களைய இயலும் என்பது செல்லையாவின் எண்ணம். செல்லையாவின் மனைவி மீனாட்சி (ரோஜா). அவரது சகோதரி பாக்கியம் (கோவை சரளா). பாக்கியத்தின் கணவன் ரங்கசாமி (வடிவேலு).
செல்லையாவின் தந்தை சிங்க பெருமாள் (நெப்போலியன்) அந்த கிராமத்தின் பெரிய மனிதர். அந்த கிராமத்து மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவர். அவரது எதிரி செல்லையாவின் மாமா மாசிலாமணி (அலெக்ஸ்). ஒரு எதிர்பாராசம்பவத்தில் சிங்கப்பெருமாள் கிராமத்திற்கு எதிராக செயல்பட்டதாக மாசிலாமணியால் குற்றம் சாட்டப்படுகிறார். அதை உண்மை என்று நம்பும் ஊர்மக்கள் அவரைத் தூற்றுகின்றனர். தன்னைப் போற்றிய மக்கள் தூற்றுவதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் இறக்கிறார் சிங்கப்பெருமாள். இந்நிகழ்வு நடந்து பல வருடங்கள் கழித்தும் தன் குடும்பத்தின் மீதான அவப்பெயரை போக்கமுடியாததால் செல்லையா அந்தக் கவலையோடே வசிக்கிறார்.
மாசிலாமணி அந்த ஊர் மக்களால் மதிக்கப்படும் மனிதனாக இருக்கிறான். அவனது இரண்டு மகன்களும் அவனுக்கு துணையாக இருக்கின்றனர். செல்லையாவின் தம்பி படிப்பு முடித்து வழக்கறிஞர் பணி ஏற்கிறான். அவனுக்கு விஜயாவுடன் (மும்தாஜ்) திருமணம் நடைபெறுகிறது. விஜயாவிற்கு கணவனுடன் தனிக்குடித்தனம் செல்ல விருப்பம். அவளால் வீட்டில் மேலும் பல சிக்கல்கள் உருவாகிறது. இறுதியில் செல்லையா தன் குடும்பத்தின் மீதான அவப்பெயரைக் களைந்தாரா என்பது மீதிக்கதை.
Remove ads
நடிகர்கள்
இசை
படத்தின் இசையமைப்பாளர் அஸ்லம் முஸ்தபா.
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads