மிண்டி காலிங்
அமெரிக்க நடிகை, எழுத்தாளர், மற்றும் நகைச்சுவை நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேரா சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட மிண்டி காலிங் (Mindy Kaling) இந்தியத் தமிழ் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நாடக நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். என்.பி.சி நிறுவனத்தின் "தி ஆபீசு" நாடகத்தில் கெல்லி கபூர் எனும் பாத்திரம் மூலம் பரவலாக அறியப்படுபவர். இவரது தந்தை கட்டுமான பொறியாளர், தாய் மகப்பேறு மருத்துவர். இவரது பெற்றோர்கள் நைசீரியாவுக்கு வேலை நிமித்தமாக புலம் பெயர்ந்து சென்றவர்கள். பின்னாளில், அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு 1979 ஆம் ஆண்டு குடி பெயர்ந்தது. இவருக்கு விசய் என்கிற அண்ணன் உள்ளார்.
கல்லூரி படிப்பு முடித்தபின், காலிங் நியூ யார்க் மாகாணத்தில் உள்ள ப்ரூக்ளின் நகரத்தில் குழந்தைகள் காப்பாளராகவும், உதவி தயாரிப்பளாரகவும் வேலை செய்தார். தனது கடைசி பெயரான சொக்கலிங்கம் என்பதை காலிங் என மாற்றிக்கொண்டார். அவரது கல்லூரித் தோழி பிரெண்டா விதர்சு (Brenda Withers) உடன் இணைந்து எழுதிய "Matt&Ben" நாடகத்தின் மூலம் "தி ஆபீசு" நாடகத்தில் நடிக்க மற்றும் எழுதும் வாய்ப்பை பெற்றார். அன்றைய வருடத்தில் சிறந்த பத்து திரையரங்கு நிகழ்ச்சிகளில் ஒன்றாக "டைம்" பத்திரிக்கை இந்த நாடகத்தை தேர்ந்தெடுத்தது. அவரது நகைச்சுவை உணர்வு அவரின் தாயிடம் இருந்து வந்தாக நினைக்கிறார்.
இவரது வாழ்க்கை வரலாற்றை "இசு எவரிவன் ஏங்கிங் வித்தவுட் மி? (அண்ட் அதர் கன்சென்சு)" எனும் நூலாக எழுதி வெளியுட்டுள்ளார்.
Remove ads
எழுதிய உட்கதைகள்
Remove ads
இயக்கிய உட்கதைகள்
இவை தவிர சில ஆலிவுட்டு திரைபடங்களில் குறும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இவற்றில் குறிப்பிட தக்கவை "தி 40 இயர் ஓல்ட் விர்ச்சின்", "அன்அக்கம்பநிடு மைனர்", "நைட் அட் தி மிசியாம் : பெட்டல் அப் தி சிமித்துசோனியன்".
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
