மிதவைப்பாலம்
மிதவைகள் அல்லது படகுகளைப் பயன்படுத்தி அமைக்கபடும் பாலம் (தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக) From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிதக்கும் பாலம் (Pontoon bridge) என்பது படகு அல்லது மிதவைகளைக் கொண்டு அமைக்கப்படும் பாலம் ஆகும். பாதசாரிகள் மற்றும் வாகனப் பயணத்திற்கான தொடர்ச்சியான சமதளத்தை உருவாக்க மிதவைகள் அல்லது படகுகளைப் பயன்படுத்தப்படுகிறது. மேலுதைப்பு ஆற்றலானது அவை சுமக்கும் அதிகபட்ச சுமையைத் தாங்குகின்றது.
பெரும்பாலான மிதவைப் பாலங்கள் தற்காலிகமானவை. அவை போர்க்காலம் மற்றும் குடிமை அவசரநிலைகளின்போது பயன்படுத்தப்படுகின்றன. நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு பயன்படக்கூடிய நிரந்தர மிதவைப் பாலங்களும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன.
மிதவைப் பாலங்கள் பழங்காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்துள்ளன. மேலும் வரலாறு முழுவதும் பல போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது கரிக்லியானோ சமர், ஓடெனார்ட் சமர், இரண்டாம் உலகப் போரின் போது ரைன் கடப்பு , ஈரான் – ஈராக் போர் ஆகியவற்றின் போது இப்பாலங்கள் பயன்படுத்தபட்டன.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads