மியாவதி நகரம்

From Wikipedia, the free encyclopedia

மியாவதி நகரம்map
Remove ads

மியாவதி நகரம் (Myawaddy), மியான்மர் நாட்டின் தென்கிழக்கில், தாய்லாந்து நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த எல்லை நகரம் மியான்மரின் காயின் மாநிலத்தில் உள்ள மியாவதி மாவட்டத்தின் தலைமையிடமாகவும் உள்ளது. மோயி ஆறு மியாவதி மற்றும் இதனருகில் உள்ள தாய்லாந்து நாட்டின் மே சோட் நகரத்தையும் பிரிப்பதுடன், மியான்மர்-தாய்லாந்து எல்லையாகவும் உள்ளது. மியாவதி நகரம் மியான்மர்-தாய்லாந்து நாடுகளின் எல்லைப்புற வணிக மையமாக உள்ளது.

விரைவான உண்மைகள் மியாவதி မြဝတီ, நாடு ...

மியாவதி நகரம் மொன் மாநிலத்தின் தலைநகரான மாவலமயீனி நகரத்திற்கு கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும்; தாய்லாந்து தலைநகரம் பேங்காக்கிற்கு வடமேற்கே 426 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

Remove ads

வரலாறு

மியான்மர் உள்நாட்டுப் போரின் போது 5 ஏப்ரல் 2024 அன்று மியான்மர் மக்கள் பாதுகாப்புப் படைகள் மற்றும் காரென் தேசிய விடுதலைப் படைகளும் இணைந்து மியாவதி நகரத்தில் இருந்த மியான்மர் இராணுவத்தினரின் நிலைகளைக் கைப்பற்றியதுடன், 500 இராணுவ வீரர்களையும் போர்க் கைதிகளாகப் பிடித்தனர்.[3][4]10 ஏப்ரல் 2024 அன்று மியாவதியில் மீதமிருந்த மியான்மர் இராணுவத்தினர் பின்வாங்கி தாய்லாந்து எல்லைக்கு விரட்டி அடிக்கப்பட்டனர்.[5][6] 24 ஏப்ரல் 2024 அன்று கிளர்ச்சிப் படைகளிடமிருந்து இராணுவம் மீண்டும் மியாவதி நகரத்தைக் கைப்பற்றியது.[7]

Remove ads

பொருளாதாரம்

மியான்மர்-தாய்லாந்து எல்லைப்புற அதிகாரப்பூர்வ வணிக மையமாக 16 செப்டம்பர் 1998 அன்று மியாவதி நகரம் திறந்து வைக்கப்பட்டது.[8]2022ஆம் ஆண்டில் மியாவதி நகரம், மியான்மரின் இரண்டாவது எல்லைப்புற வணிக மையம் ஆகும்.[9][10][11]மியாவதி நகரம் வழியாக நவரத்தினக் கற்கள் தாய்லாந்திற்கு ஏற்றுமதியாகிறது.[12][13]இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மோரே நகரம் இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை மூலம் மியாவதி நகரத்துடன் ஆகஸ்டு 2015ல் இணைக்கப்பட்டது.

Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மியாவதி நகரத்தின் மக்கள் தொகை 149,510 ஆகும்.[14]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads