மீத்தோடிரெக்சேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மீத்தோடிரெக்சேட்டு (Methotrexate) [குறுக்கம்: MTX; பழைய பெயர்: அமிதோப்டெரின் (amethopterin)], வளர்சிதைமாற்றத் தடுப்பியும், ஃபோலிக் அமிலத்தடுப்பி மருந்துமாகும். இது புற்றுநோய், தன்னெதிர்ப்பு நோய்கள், கருக்குழாய் கருவளர்ச்சி (ectopic pregnancy), மருத்துவ கருக்கலைப்பு ஆகியவற்றில் சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படுகிறது[2]. 1950 - ஆம் ஆண்டுகளிலிருந்து மிகவும் நஞ்சார்ந்த ஃபோலிக் அமிலத்தடுப்பியான அமினோப்டெரின் மருந்திற்கு பதிலாக மீத்தோடிரெக்சேட்டு பயன்படுத்தப்படுகிறது. மீத்தோடிரெக்சேட்டு, ஃபோலிக் அமில வளர்சிதைமாற்றத்தைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது. இம்மருந்து இந்திய உயிர்வேதியியலாளரான சுப்பாராவ் என்பவரால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது[3][4][5].
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads