மீப்பாய்மத்தன்மை

From Wikipedia, the free encyclopedia

மீப்பாய்மத்தன்மை
Remove ads

பொருளானது பிசுக்குமையற்ற பாய்மமாக செயல்படும் பொருட்களின் நிலையே மீப்பாய்மத்தன்மை (Superfluidity) என்றழைக்கப்படுகிறது; இந்நிலையில் பொருளானது புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பு இழுவிசை ஆகியவற்றை எதிர்த்து தன்னிச்சையாக செயல்படுகிறது. வானியற்பியல், மீஉயர்-ஆற்றல்-இயற்பியல் மற்றும் குவாண்டம் புவியீர்ப்பு தேற்றங்களில் மீப்பாய்மைத்தன்மை நிலை காணப்பெறுகிறது. இந்நிகழ்வு போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் உடன் தொடர்புடையதாகும்; ஆனாலும் அனைத்து போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருட்களும் மீப்பாய்மத்தன்மையுடையதாகவோ அல்லது மீப்பாய்மத்தன்மையுடைய அனைத்தும் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருளாகவோ கொள்ளப்படமுடியாது.[1][2][3]

Thumb
படம். 1. ஹீலியம் II ஆனது உட்புற இரு கொள்கலன்களிலும் ஒத்த நிலையை அடையும் வரை சுவர்வழியே ஊர்ந்து செல்லும்.
Thumb
படம். 2. திரவ ஹீலியம் மீப்பாய்மத்தன்மையில் இருக்கிறது. அது மீப்பாய்மமாக இருக்கும் வரையில், குப்பியின் சுவர்மீது ஒரு மெல்லிய படலமாக ஏறி குப்பியின் அடியில் சொட்டுச் சொட்டாக, குப்பியில் மீப்பாய்ம ஹீலியம் காலியாகும் வரையில், சொட்டும்.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads