மீமிசல் கல்யாணராமசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மீமிசல் கல்யாணராமசாமி கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் மற்றும் பெருமாள் அல்லது ராமர் கோயிலாகும்.[1]

விரைவான உண்மைகள் அருள்மிகு கல்யாணராமசாமி கோவில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் புதுக்கோட்டை-அறந்தாங்கி-ஆவுடையார் கோயில் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 68 கி.மீ. தொலைவில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.[2]

வரலாறு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் கல்யாண ராமசாமி, இறைவி மங்களநாயகி மற்றும் அர்ச்சுனவனேசுவரர் இறைவி பிருகத் குஜலாம்பிகை ஆகியோர் உள்ளனர். இக்கோயில் இராமாயணத்தோடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மகரிஷிகள் மற்றும் முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று இராமர், கல்யாணராமனாகக் காட்சி தந்த சிறப்பு பெறறது. இங்குள்ள குளத்தில் நீராடி இரு இறைவனையும், இறைவியரையும் ஒரே நேரத்தில் வழிபடுவோருக்கு நினைத்த வெற்றிகள் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.[2] கோயில் தீர்த்தம் கல்யாண புஷ்கரணி ஆகும்.[3]

கோயில் அமைப்பு

இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மொத்தம் நான்கு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[4]

விழாக்கள்

ஆடிப்பெருந்திருவிழா,[2] தெப்பத்திருவிழா [5] சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாதத்தில் 9ஆம் நாள், 12ஆம் நாள் முக்கிய திருவிழாவாகக் கருதப்படுகிறது. 9ஆம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. ஆடி மாதம் 12ஆம் நாள் திருவிழாவாக நடைபெறுகிறது.

திறந்திருக்கும் நேரம்

விஸ்வரூபம் (காலை 7.00 மணி), காலசந்தி (காலை 9.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.00 மணி) என்ற வகையில் ஐந்து கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 முதல் 8.30 வரையிலும் திறந்திருக்கும்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads