மீர்

From Wikipedia, the free encyclopedia

மீர்
Remove ads

மீர் அல்லது மிர் (Mir, ரஷ்ய மொழி: Мир), சோவியத் ஒன்றியத்தின் (தற்போது ரஷ்யா) பூமியைச் சுற்றி வர ஏவப்பட்ட ஒரு விண்நிலையம் ஆகும். விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட நீண்ட-கால தொழிற்பாடுடைய விண்நிலையம் இதுவாகும். உலக அமைதியின் சின்னமாக சோவியத் ஒன்றியம் இதனை உருவாக்கியது. 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 இல் இந்நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. மீர் என்பது ரஷ்ய மொழியில் சமாதானம் அல்லது அமைதி எனப் பொருள்படும். விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மீள் விண்கப்பலில் பயணம் செய்து, விண்வெளியில் நிரந்தரமாகக் குடியேற சோவியத்தின் இத்திட்டம் வழிகோலியது. ரஷ்ய விண்கப்பலான சோயுஸ் மூலமாக முதலில் விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து, மீர் நிலையத்தோடு இணைக்கப்பட்டு இடம் மாறிக்கொண்டனர். அதன் பின்னர் நாசாவின் அட்லாண்டிஸ் மீள்விண்ணோடம் மீருடன் இணைந்தது.[1][2][3]

விரைவான உண்மைகள் மீர் விண்வெளி நிலையம், நிலையத் தரவுகள் ...

மீர் விண்வெளி நிலையம் மார்ச் 23, 2001 வரை இயங்கியது. இது பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து கட்டாயமாக விலக்கப்பட்டு தென் பசிபிக் பெருங்கடலில் விழுந்து மூழ்க விடப்பட்டது.

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads