மீளுருவாக்கம்
ka From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரு பொருளின் பயன்பாடு முடிவுற்றவுடன் அதன் மூலப்பொருட்களை புதிய பொருட்களாகச் செய்யும் செயற்பாடு மீளுருவாக்கம் (அல்லது மீள் சுழற்சி, மறுசுழற்சி (Recycling) எனப்படுகிறது. மீளுருவாக்கம் புதிய மூலப்பொருள் தேவையையும் அவற்றைப் பதனிடத் தேவையான ஆற்றலையும் குறைப்பதோடு கழிவுப்பொருள் வெளியேற்றத்தையும் குறைக்கிறது. மீளுருவாக்கம் பசுங்குடில் விளைவை ஏற்படுத்தும் வளிமங்களின் வெளியேற்றத்தையும் குறைக்கிறது.[1][2] மீளுருவாக்கம் கழிவு மேலாண்மையில் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கழிவு மறுபயனீடு (Reuse), கட்டுப்படுத்தல் (Reduce) என்பன ஏனைய இரண்டு பகுதிகளாகும்.

கண்ணாடி, காகிதம், மாழைகள், நெகிழிகள், நெய்பொருட்கள், இலத்திரனியல் கருவிகள் போன்றவை மீளுருவாக்கம் செய்யப்படக்கூடியனவாகும். பழைய உணவு அல்லது மரக்கிளைகளைக் கொண்டு உரம் தயாரித்தல் மீளுருவாக்கமாகக் கொள்ளப்படுவதில்லை. [2] மீளுருவாக்கம் செய்யப்படவேண்டிய பொருட்கள் பாதையோரக் கழிவுப் பெட்டிகளில் இருந்தோ அல்லது சேகரிப்பு நிலையத்திற்கு நேரடியாகவோ கொண்டுவரப்படுகின்றன. பின்னர் வகைப் பிரிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு மூலப்பொருட்களாக செய்யப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads