முகடு

From Wikipedia, the free encyclopedia

முகடு
Remove ads

முகடு (ridge) என்பது நீண்ட குறுகலான மேடாக உள்ள புவிப்புற நிலவடிவம் ஆகும்; இது ஒரு புவிக் கட்டமைப்புக் கூறுபாடு ஆகும். இது புவிப்புற நிலவடிவமாகவும் கட்டமைப்புக் கூறுபாடாகவும் சூழ்ந்துள்ள தரையில் இருந்து உயரத்தில் செஞ்சரிவுகளோடு அமைகிறது. இதன் குறுகலான முகட்டு உச்சியில் இருந்து அல்லது கொடுமுடி உச்சியில் இருந்து இருபக்கமும் தரை கீழாக சரிந்து செல்கிறது. முகடு மிகவும் குறுகலாக இருந்தால் முகட்டுத் தொடர் எனப்படுகிறது. முகட்டின் அளவுகள் ஏதும் வரம்பிடப்படவில்லை. இதன் உயரம் சுற்றியுள்ள தரையிலிருந்து ஒரு மீட்டர் அளவில் இருக்கலாம்; அல்லது பல நூறு மீட்டர் அளவிலும் இருக்கலாம். முகடு படிவாலோ அரிப்பாலோ கண்டத் தட்டுகளின் நகர்வாலோ அல்லது இவற்றின் இணைநிகழ்வாலோ தோன்றலாம். இது படுகைப் பாறையாலோ தளர்வான வீழ்படிவாலோ அனற்குழம்பாலோ பனிக்கட்டியாலோ உருவாக்கத்தைப் பொறுத்து அமையலாம். இது தனித் தற்சார்புக் கூறுபாடாகவோ பெரிய புவிக்கட்டமைப்பின் உட்கூறாகவோ அமையலாம். முகடு மேலும் சிறிய புவிவடிவக் கட்டமைப்பு உறுப்புகளாகவும் பிரிக்கப்படுகிறது.[1][2][3]

Thumb
யப்பானில் உள்ள மலைமுகடு
Thumb
அப்பலாசிய மலைகளில் அமையும் மாறுசரிவு முகடு.
Thumb
துயா விளிம்புகள முகடாதல்.
Thumb
Pirin மலையின் முதன்மை முகடு – கொஞ்செட்டோ கத்தி விளிம்பு முகட்டில் இருந்து, விகிரன்,குட்டெலோ கூம்புப் பட்டகச் சரிவுகள் நோக்கிய காட்சி

முகடுகளைப் பொதுவாக கொடுமுடிகள் அல்லது குன்றுகள் என்று, அளவைப் பொறுத்து அழைக்கின்றனர். சிறிய முகடுகள், குறிப்பாகப் பெரிய முகடுகளை விட்டு வெளியே காணப்படும் பகுதி, பெரும்பாலும் முளைக் குன்று என்று குறிப்பிடப்படுகிறது.

Remove ads

வகைபாடு

முகடுகளின் நில வடிவங்களைப் பொருத்தமட்டில் பொதுவாக ஏற்கப்பட்ட வகைபாடோ கிடப்பியல் வகைமையோ இல்லை. அவற்றைத் தோற்றம், புறவடிவம், உள்ளியைபு, தொலைவிட உணரிகளின் தரவுகளைப் பகுத்தாய்ந்தோ அல்லது இவற்றின் சில காரணிகளை இணைத்தோ வரையறுத்து வகைப்படுத்தலாம்.

முகட்டு வகைப்பாட்டுக்கான எடுத்துகாட்டாக, சோயெனபர்கு, விசோக்கி வகைபாட்டைக் கூறலாம்;[4] இது எளிய நேரடி வகைபாட்டு முறையைத் தருகிறது. இதை ஐக்கிய அமெரிக்க தேசியக் கூட்டுறவு மண் அளக்கைத் திட்டம் நிலவடிவங்களையும் முகடுகளையும் வகைப்படுத்தப் பயன்படுத்துகிறது. இம்முறை முதன்மை புவிப்புற நிகழ்வுகளை அல்லது அமைவுகளைப் பயன்படுத்தி, பல்வேறு நிலவடிவக் குழுக்களை இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கிறது; அவை புவிப்புறவடிவச் சூழல்கள், பிற குழுக்கள் என மொத்தம் 16 உட்பிரிவுகளாகப் பிரிக்கிறது. இந்தக் குழுக்கள் ஒன்றையொன்று விலக்குவன அல்ல; முகடுகள் உள்ளடங்கிய நிலவடிவங்கள் பல உட்பிரிவுகளைச் சார்ந்தமையலாம். இந்த வகைபாட்டில் முகடுகள் காற்றால் குவிப்பு வகை, கடல் கரை, கழிமுக வகை, Lacustrine, பனியாற்றுவகை, எரிமலை, அனல்நீர்ம வகை, கண்டத்தட்டு நகர்வு சார்ந்த கட்டமைப்புவகை, சரிவு வகை, அரிப்புசார் உள்வகைகள் எனப் பிரிக்கப்படுகின்றன.[4]

அரிப்புவகை மலை முகடுகள்

வழக்கமான மேட்டுச் சமவெளி நிலப்பகுதியில், ஓடை வடிகால் பள்ளத்தாக்குகள் குறுக்கிடும் பகுதிகளில் முகடுகள் காணப்படுகின்றன. இவை மிகவும் பொதுவான முகடுகளே. இந்த முகடுகள் வழக்கமாக சற்று உயர் அரிப்பு எதிர்ப்புக் கற்களையே கொண்டுள்ளன. இந்த வகை முகடுகள் பொதுவாக திசையமைப்பில் பெரும்பாலும் சீரற்றதாக இருக்கிறது. அடிக்கடி திசையை மாற்றிக் கொள்கிறது.

பாறை இடுக்கு(செஞ்சரிவு) மலை முகடுகள்

பள்ளத்தாக்குகளுடன் கூடிய இடங்களில், நீண்ட, கூரான, நேர்க்குத்தான முகடுகள் உருவாகின்றன. ஏனென்றால் அவற்றின் மீதமுள்ள விளிம்புகள் பக்கவாட்டாக மூடப்பட்டிருக்கும். மேலும் தடுக்கும் முனையங்கள். பிளாக் ஹில்ஸ் போன்ற இடங்களில் இதேபோன்ற முகடுகள் உருவாகியுள்ளன. அங்கு முகடுகள் சீரற்ற மையத்தைச் சுற்றி ஒரு வட்ட வடிவமாக அமைந்துள்ளன. சில நேரங்களில் இந்த முகடுகளை நடு முகடுகளில் கூர்ம்பாறைகளுடன் காணலாம்.

பெருங்கடல் அகற்சி மலை முகடுகள்

மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் போன்று உலகெங்கிலும் உள்ள புவி மேலோட்டு கடபரப்பு மண்டலங்களில், புதிய கண்டத்தட்டு எல்லை உருவாக்கும் எரிமலைகளின் செயல்திறன் பரவி எரிமலை முகடுகளை உருவாகின்றன. பனியரிப்பும் நீரரிப்பும் படிப்படியாக எரிமலை முகடுகளின் உயரங்களை குறைக்கின்றன.

Remove ads

மேலும் காண்க

விரைவான உண்மைகள்

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads