முகம்மது உமர்

தாலிபான்களின் முதல் மற்றும் முன்னாள் தலைவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

முல்லா முகமது ஒமர் முஜாஹித் (அல்லது முகமது உமர்) (பாஷ்தூ மொழி: ملا محمد عمر مجاهد, பிறப்பு 1959[சான்று தேவை], கந்தஹார் அருகில் இறப்பு ஏப்ரல் 2013) ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பின் முன்னாள் தலைவர். தாலிபான்கள் இவரை நம்பிக்கைக்குரியவர்களின் தளபதி அல்லது முஸ்லிம்களின் உயர்ந்த தலைவர் என அங்கீகரித்திருந்தனர்.[1] 1996 முதல் 2001 வரை தாலிபான் ஆட்சி பதவியிலிருக்கும்பொழுது இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் 11வது தலைவராக இருந்தார். 2001இல் நடந்த அமெரிக்காவின் ஆப்கான் தாக்குதலுக்கு பிறகு இவர் தலைமறைவானார்[சான்று தேவை]. ஒசாமா பின் லாடனுக்கும் அல் காயிதாவிற்கும் உதவியதால் அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் முல்லாமுகமது ஒமர்ملا محمد عمر, ஆப்கானிஸ்தான் உச்ச மன்றத் தலைவர் ...

இவர் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்திற்கு எந்தவித அரசியல் தொடர்பும் கிடையாது. 1980களில் சோவியத் யூனியன் மற்றும் பொதுவுடமைவாத ஆப்கானிஸ்தான் மக்கள் குடியரசுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீனில் இவர் இணைந்தார்.[2] 1994ல் இவர் தாலிபானை தோற்றுவித்தார். 1995 ஆம் ஆண்டில் பெரும்பாலான தெற்கு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினார். 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தாலிபான்கள் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றினர்.[2] இவர் ஆப்கானிஸ்தானின் அமீராக பதவி வைத்த பொழுது எப்போதாவதுதான் கந்தகார் நகரை விட்டு வெளியே செல்வார். வெளியாட்களையும் இவர் எப்போதாவதுதான் சந்தித்துள்ளார்.[3] இவர் மிகவும் சிறிய அளவே பேசக்கூடியவர். கடுமையான வாழ்க்கைச் சூழ்நிலைகளில் வாழும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.[2]

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் மற்றும் அல்கைதா தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் தேடப்பட்டார்.[4] இவர் அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தபோது தப்பினார். பிறகு நேட்டோ தலைமையிலான சர்வதேச படைகள் மற்றும் புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிரான தாலிபான் கிளர்ச்சியை இயக்கினார்.

2012-ம் ஆண்டு அமெரிக்க அதிபர், ஒபாமாவிற்கு இவர் எழுதியதாகக் கூறப்படும் கடித்தத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[5][6]

உடல்நலக்குறைவால் 2013 ஏப்ரலில் இறந்தார் என 2015ம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டது.[7]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads