முகவை இராமானுசக் கவிராயர்
தமிழாசிரியர், இலக்கண ஆசிரியர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகவை இராமானுசக் கவிராயர் (இறப்பு 1852) தமிழ் இலக்கியவாதியும், பதிப்பாளரும், வைணவப் புலவருமாவார். இவர் இயற்றமிழாசிரியர் இராமானுசக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றவராவார்.[1]
ஆரம்ப வாழ்க்கை
இராமானுசக் கவிராயர் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள முகவை என்னும் ஊரில் பிறந்தவர். இளமையில் பட்டாளத்தில் சேர்ந்து போர் வீரராகப் பணியாற்றினார். பின்னர் மாதவச் சிவஞான முனிவரின் மாணவரான திரு சோமசுந்தரப் பிள்ளையிடம் தமிழ் கல்வி கற்றுக் கொண்டார்.[2]
சென்னையில் வாழ்க்கை
பிற்காலத்தில் சென்னையில் சஞ்சீவிராயன் பேட்டையில் குடியேறினார். வைணவப் பற்று மிகுந்த இவர் சொந்தமாக ஒரு அச்சகத்தை சஞ்சீவிராயன் பேட்டையில் நிறுவி நடத்தி வந்தார்.
கற்பித்தல் பணி
இவரிடம் பல முக்கிய நபர்கள் தமிழ் கற்றுக் கொண்டனர்:
- வீராசாமி செட்டியார்
- களத்தூர் வேதகிரி முதலியார்
- திருத்தணிகை விசாகப் பெருமாளையர்
- சரவணப் பெருமாளையர்
- ஐரோப்பியர்களான தாம்சன் கிளர்க், ராஜஸ்துரு, ஜி. யு. போப், இரேனியூஸ் முதலியோர்
பதிப்பு நூல்கள்
திருக்குறள் பதிப்பு
திருக்குறளுக்கு வெள்ளுரையும், புத்துரையும் (1840) எழுதி வெளியிட்டார். மேலும் திருக்குறளின் 63 அதிகாரங்களை பரிமேலழகர் உரையுடனும், தமது தெளிபொருள் விளக்கத்துடனும், துரு (Drew) என்னும் ஐரோப்பியர் எழுதித் தந்த ஆங்கில மொழிபெயர்ப்புடனும் பகுதி பகுதியாக 1840 முதல் 1862 ஆம் ஆண்டுக்குள் அச்சிட்டுப் பதிப்பித்தார்.[3]
நற்றிணைப் பதிப்புகள்
நற்றிணை நூல்களுக்கு காண்டிகை உரை எழுதினார்:
- ஆத்திசூடி (1840)
- கொன்றைவேந்தன் (1847)
- வெற்றிவேற்கை (1847)
- இனியவை நாற்பது (1845) - பழைய உரையுடன்
இலக்கண நூல்கள்
- நன்னூலுக்கு விருத்தியுரை (1847)
- நன்னூலுக்கு காண்டிகையுரை (1847)
- இலக்கணச் சுருக்கம் (1848)
பிற படைப்புகள்
- ஆத்மபோதம் - வடமொழி நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு (1848)
- பஞ்ச ரத்ன மாளிகை - பச்சையப்ப வள்ளல் மீது புனைந்த நூல் (1848)
- பார்த்தசாரதி மாலை
- வரதராசப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி
Remove ads
சிறப்புகள்
உவின்சுலோ ஆங்கில-தமிழ் அகராதி தொகுப்புக்கு முழுவதும் உதவி செய்தார்.[4]
இவருடைய நன்னூல் விருத்தியுரைக்கு சாத்துக்கவி அளித்தவர்கள்:
- தொல்காப்பிய வரதப்ப முதலியார்
- அஷ்டாவதானம் வீராசாமி (செட்டியார்) கவிராயர்
- களத்தூர் வேதகிரி முதலியார்
மறைவு
இராமானுசக் கவிராயர் 1852இல் இறந்தார். இவரது உரைகள் இவரது இலக்கண இலக்கியப் புலமையைக் காட்டுவனவாக திகழ்கின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads