முக்காணி

தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

முக்காணி (Mukkani) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், ஏரல் வட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஊராட்சி ஆகும். இந்த ஊரானது தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இது விவசாயத்திற்கு பிரசித்தி பெற்ற பகுதியாகும். தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இங்கு வெற்றிலை, வாழை, நெல், மஞ்சள் , பச்சை பயறு, உளுந்து, கரும்பு ஆகியவைகள் பயிரிடப்பட்டன. தற்போது பல்வேறு வகையான வாழை ரகங்கள் மட்டுமே பயிரிடப்படுகிறது.

விரைவான உண்மைகள் முக்காணி, நாடு ...
Remove ads

மக்கள்தொகையியல்

இந்த ஊரானது ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 639 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1768 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6851 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3507, பெண்களின் எண்ணிக்கை 3344 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 76.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[1]

கோனார்கள், சேனைத்தலைவர் சமுதாயம் என்றழைக்கப்படும் மூப்பனார்கள், நாடார்கள், தேவேந்திர குல வேளாளர்கள், மீனவர்கள், தேவர், பறையர்கள், ஆசாரிகள், ஐயர், செட்டியார், குயவர் உள்ளிட்ட ஜாதிப்பிரிவினர் வசித்து வருகின்றனர்.[2]

Remove ads

முக்காணியர்கள்

முக்காணியர்கள் முக்காணியை தலைமையிடமாக கொண்டவர்கள் ஆவார்கள். டச்சிக்காரர்கள் படையெடுப்பின் போது முக்காணியர்கள் டச்சுக்காரர்களுக்கு எதிராக போரிட்டு வென்றார்கள் என்று திருச்செந்தூர் தல வரலாறுகளில் சான்றுகள் காணப்படுகின்றன.

இன்றளவும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மூலவருக்கு- போற்றி மடைப் பள்ளியிலும், ஆறுமுகனுக்கு - முக்காணியர்கள் மடைப் பள்ளியிலும், வேங்கடாசலப் பெருமாளுக்கு- வைணவ மடைப்பள்ளியிலும் தனித்தனியே நைவேத்தியங்கள் தயாராகின்ற பணிகளை செய்து வருகின்றனர்.[3]

Remove ads

இவற்றையும் காண்க

முக்காணி வெங்கடாஜலபதி கோயில்

முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்மன் கோவில்

முக்காணியில் புகழ் பெற்ற அருள்மிகு ஆதிபரமேஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா ஒரு ஆண்டு கோனார்களும், அடுத்த ஆண்டில் சேனைத் தலைவர் சமுதாயத்தினரும் நடத்தி வருகின்றனர். அனைத்து ஜாதி மற்றும் மதத்தினரும் இக்கோயிலில் வழிபாடு நடத்துவார்கள். கொடை விழாவின் போது போடப்படும் பந்தல் அலங்காரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

முக்காணி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்

இக்கோயில் புதுமனை நாடார் தெருவில் அமைந்துள்ளது. நாடார்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் கொடை விழா இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.

முக்காணி அருள்மிகு புலமாட சுவாமி திருக்கோயில்

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோயில் நிர்வாகம் நாடார்கள் வசம் உள்ளது. எனினும், கோனார்கள், தேவர்கள், தேவேந்திரகுல வேளாளர்கள் என அனைத்துச் சாதியினரும் இக்கோயிலில் கிடா வெட்டி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் உரிமை பெற்றுள்ளனர்.

முக்காணியில் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்களும், ஒரு மசூதியும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads