முக்குவர் சட்டம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முக்குவர் சட்டம் என்பது மட்டக்களப்பு பகுதியில் வழங்கப்பட்ட வழக்கங்களை முதன்மையாக வைத்து ஆதிக்க வர்க்க ஆளுமைகளைக் கொண்டு ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட சட்டம் ஆகும்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிட்டது போல் சமூகத்தில் மக்கள் நடத்தைக்கான முழுமையான விதிகளாக இச்சட்டங்களை விளங்கிக்கொள்வதனால் இவை ஆக்கிரமிப்புச் செலுத்தும் குழுவின் விருப்பத்தை வெளிப்படுத்துவதோடு சமூகத் தொடர்புகளையும் பொது ஒழுங்குகளையும் ஆக்கிரமிக்கும் குழுவிற்கு வாய்ப்பளிக்கத்தக்க வகையில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டதாகும்.[1]

ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியை கட்டுப்படுத்தும் தந்திரத்தின் நோக்கத்துக்கமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய மட்டக்களப்பு ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் மட்டக்களப்பில் பின்பற்றியதாக தெரியவில்லை.

Remove ads

குறிப்புகள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads