முக்தி குப்தேசுவர் கோவில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முக்தி குப்தேசுவர் கோவில் (Mukti Gupteshwar Mandir, முக்தி குப்தேஷ்வர் மந்திர்) ஆத்திரேலியாவில் அமைக்கப்பட்ட ஒரே இந்துக் குடைவரைக் கோயில் ஆகும்.

வரலாறு

இக்கோயில் ஆத்திரேலியாவில் சிட்னி மாநகரத்தில் இருந்து 50கிமீ தென்மேற்கேயுள்ள புறநகர்ப் பகுதியான மின்டோ என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. இங்கு கருவறையில் 13-ஆவது ஜோதிர்லிங்கம் தாபிக்கப்பட்டுள்ளது. தற்போதைய படைப்பு அழிப்புச் சக்கரத்தில் 13 ஆவது ஜோதிர்லிங்கமே இறுதியானதும் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ளதுமாகும். இது காலஞ்சென்ற நேபாள மன்னரான பிரேந்திராவினால் அவுஸ்திரேலியாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்த 13 ஆவது ஜோதிர்லிங்கத்தின் பெயர் "முக்தி குப்தேஸ்வரர் மகாதேவ்" என்பதாகும். அதாவது குகையின் கடவுளான சிவன் என்பது இதன் பொருள். இங்கு குகை என்பது உருவகமாக ஆத்மாவைக் குறிக்கிறது. இந்த வகையில் இங்கு கோயில் கொண்டுள்ள 13வது ஜோதிர்லிங்கமானது சுயம்புவாக உருவான லிங்கமாகும். தொல்பொருள் ஆய்வின்படி 220-240 கோடி வருடங்களின் முன் இது பாறைகளின் மத்தியில் உருவானது எனக் கருதப்படுகிறது.

Remove ads

அமைப்பு

இங்கு கருவறையில் 13வது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. ஏனைய 12 ஜோதிர்லிங்கங்களின் மாதிரி வடிவங்களும் இங்கு உள்ளன. அவை தவிர சிவனின் உருத்திர நாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 108 லிங்கங்களும் 1008 சகஸ்ரநாமங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளும் இங்கு உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் சிறிய கோயில்கள் இங்குள்ளது. அதாவது முக்தி குப்தேஸ்வரர் கோயிலுக்குள் 1128 சிறிய கோயில்கள் உள்ளன. இது மிகவும் தனித்துவமான ஓர் அமைப்பாகும். கருவறையில் 10 மீட்டர் ஆழமுள்ள ஒரு நிலவறையமைப்பு உள்ளது. அதில் 'ஓம் நமசிவாய' என்று உலகம் முழுவதிலுமுள்ள 2 மில்லியன் பக்தர்கள் தத்தமது கைபட எழுதியவை உள்ளது. அத்துடன் அவுஸ்திரேலியாவிலுள்ள முக்கிய நதிகள் உட்பட 81 நதிகளிலும் 5 சமுத்திரங்களிலும் பெறப்பட்ட நீரும், 8 பெறுமதி வாய்ந்த உலோகங்களும் ஞானிகள் மற்றும் முக்கியமானவர்களது நல்லாசிகளும் இங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மகாதேவ மந்திருக்கு அருகில் மாதா மந்திர், ராம்பரிவார் மந்திர், கணேஷ மந்திர் ஆகியனவும் உள்ளன.

Remove ads

பூசைகள்

தினமும் இங்கு காலையில் புரோகிதரால் இந்த 13வது ஜோதிர்லிங்கம் உட்பட 1128 சிவ வடிவங்களுக்கும் உணவு படைக்கப்படுகிறது (நைவேத்யம்).

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads