முக்தீஸ்வரர் கோயில், ஒடிசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்தீசுவரர் கோயில் (Mukteshvara Temple) இந்திய மாநிலமான ஒடிசாவின் கோர்த்தா மாவட்டத்தில் உள்ள புவனேசுவரத்திற்கு அருகில், கலிங்கக் கட்டிடக்கலையில், பொ.ஊ. 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில், முத்தீசுவரருக்கு அர்பணிக்கப்பட்டதாகும்.[1]
இக்கோயில் புவனேசுவரத்தில் உள்ள இலிங்கராசர் கோயில் மற்றும் இராசாராணி கோயில் போன்று கட்டப்பட்டதாகும்.[2][3]


Remove ads
சிறப்பு
ஒடிசா மாநிலத்தில் கலிங்கக் கட்டடக்கலையில் உள்ள கோயில்கள் கருவறை, முன் மண்டபம் (ஜக் மோகன்), நடன மண்டபம், போக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டதாகும். இக்கோயில் கருவறை, ஜக்மோகன் அமைப்புகளைக் கொண்டது. முன் மண்டபக்கூரையில் காணப்படுகின்ற சிற்ப வேலைப்பாடுகள் அனைவரையும் கவரும் வகையில் உள்ளதாகும். இக்கோயில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. கோயிலின் கிழக்குப் புறத்தில் மரீசி குண்டம் எனப்படுகின்ற கிணறு உள்ளது. கருவறையில் சிவபெருமான் சிறிய வடிவில் உள்ளார். நுழைவாயிலில் துவாரபாலகர்கள் உள்ளனர். வாயிலின் மேற்பகுதியில கஜலட்சுமி உள்ளார். அதற்கும் மேற்புறத்தில் சூரியன் முதல் கேது வரையுள்ள நவக்கிரகங்கள் தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில் உள்ளனர். பொதுவாக ஒடிசாவில் உள்ள கோயில்களில் நவக்கிரகங்களின் வடிவங்களை நுழைவு வாயிலின் மேல் பகுதியில் அமைப்பது வழக்கமாகக் காணப்படுகிறது.[4]
Remove ads
கட்டிடக் கலை
வளைவு தோரணங்களுடன் கூடிய முக்தீஸ்வரர் கோயிலின் முகப்பு மண்டபமே இக்கோயில் கட்டிடக் கலையின் சிறப்பு அம்சமாகும்.[5] கோயிலின் தோரண வாயிலை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் குடிய பருத்த தூண்கள் தாங்கி நிற்கின்றன.[6] மண்டபத்தின் பாதைகளில் குரங்குகள், மயில்களின் சிற்பங்கள் காணப்படுகிறது.[7][8] கோயில் விமானங்கள் கூரான கொடுமுடிகளுடன் கூடியது. கோயில் சுற்றுச் சுவர்களில் விஷ்ணு, இலக்குமி, சரசுவதி, கணபதி, மற்றும் நடனப் பெண்டிர், யாழிகள் மற்றும் சிங்கங்களின் அழகிய சிற்பங்கள் உள்ளது.[7][9]
Remove ads
அமைவிடம்
புவனேசுவரம் நகரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
படக்காட்சியகம்
- கோயில் வரைபடம்
- கோயிலின் பக்கவாட்டுக் காட்சி
- கோயில் விமானங்கள்
- வளைவு தோரணங்களுடன் கூடிய நுழைவாயில்
- தோரண வேலைப்பாடுகள்
- சிற்ப வேலைப்பாடுகள்
- விஷ்ணுவின் சிற்பம்
- நாட்டியமாடும் பெண்னின் சிற்பம்
- கோயிலின் உட்புற மண்டபத்தின் கூரை
- கோயிலின் தோரண நுழைவு வாயில்
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads