முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முங்கோ ஏரியில் கிடைத்த எச்சங்கள் என்பன, முங்கோ ஏரிப் பகுதியில் கிடைத்த மூன்று தொகுதி மனித உடல் எச்சங்களைக் குறிக்கும். இவை முங்கோ ஏரி 1 (முங்கோ பெண்), முங்கோ ஏரி 2, முங்கோ ஏரி 3 (முங்கோ மனிதன்) என அழைக்கப்படுகின்றன. முங்கோ ஏரி, ஆசுத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில், குறிப்பாக உலக பாரம்பரியக் களப் பட்டியலில் உள்ள வில்லாந்திரா ஏரிப் பகுதியில் அமைந்துள்ளது.[1][2]

முங்கோ ஏரி 1 1969ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் மிகப்பழைய தகனங்களுள் ஒன்று.[1][3] முங்கோ ஏரி 3 1974ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது, பிளீசுட்டோசீன் காலத்தில் 40,000 - 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஆசுத்திரேலியத் தொல்குடி மனிதனுடையது. இவையே ஆசுத்திரேலியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட, உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதரின் மிகப்பழைய எச்சங்களாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads