முடச்சிக்காடு
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முடச்சிக்காடு தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
முடச்சிக்காடு காவிரி ஆற்றின் கடைமடைப்பகுதியில் அமைந்துள்ளது. முடச்சிக்காடு முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமம் முடச்சிக்காடு. முடச்சிக்காடு கிராமத்தின் மூன்று எல்லைகளிலும் முடச்சிக்காட்டை காக்கும் காவல் தெய்வங்கள் உள்ளன. பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் முடச்சிக்காடு அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், ஓர் அரசு கலைக்கல்லூரியும் அமைந்துள்ளது. முடச்சிக்காட்டில் வடக்கு எல்லையில் அருள்மிகு முத்துப்பிடாரி அம்மனும், கிழக்கு எல்லையில் அருள்மிகு அம்மையப்ப அய்யனார் ஆலயமும் தெற்கு எல்லையில் சிவலிங்க்க சித்தி விநாயகரும் அமைந்துள்ளது சிறப்பு.
முடச்சிக்காட்டில் வடக்கு காவிரி ஆற்றின் கிளை ஆறும் மேற்கு எல்லையில் பூனைக்குத்தி ஆறும், தெற்கு எல்லையில் ஊமத்தாநாடு ஏரியும் உடைய நீர் நிலைகள் அமைந்துள்ளது முடச்சிக்காட்டின் நீர் நிலை ஆதாரமாக திகழ்கிறது.






Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
