முடி காணிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முடி காணிக்கை, இந்து சமயத்தில் குழந்தை பிறந்து ஓராண்டிற்குள் அல்லது மூன்றாவது வயதிலோ, ஐந்தாவது வயதிலோ ஒற்றைப்படை வயதில் தங்கள் குல் தெய்வ கோயில்களில் அல்லது திருப்பதி வெங்கடாசலபதி கோயில், பழனி முருகன் கோயிலில் முதல் மொட்டை போடுவது இந்துக்களின் தொன்ம நம்பிக்கை ஆகும். மொட்டை போட்டவுடன் குழந்தையின் தலையில் குழந்தையின் தந்தை சந்தனம் பூசுதல் வேண்டும். இரட்டைப் படை வயதில் முதல் முடி காணிக்கை செய்தல் கூடாது.[1]
இப்பிறப்பில் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் குழந்தை, முன் ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பைத் துண்டிக்கவே முடி காணிக்கை செலுத்தப்படுகிறது. இந்து சமயத்தில் ஒரு குழந்தை பிறந்த பிறகு செய்யும் 16 சடங்களுகளில் 6வது சடங்காக முடி காணிக்கை சடங்காகும்.[2]
Remove ads
முடி காணிக்கையின் சிறப்பு
முடி காணிக்கை செலுத்துவதால், நம்முடைய அகந்தை அகன்று, அடக்கம் பிறக்கிறது. தங்களுடைய குலதெய்வம், இஷ்ட தெய்வத்துக்கு முணி காணிக்கை செலுத்துவதால், தங்கள் மனதில் உள்ள பாரமெல்லாம் இறங்கிவிடுவதாக பக்தர்களின் நம்பிக்கை.
தொன்ம வரலாறு
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான ஏயர்கோன் கலிக்காம நாயனார் சோழ அரசசினின் படைத்தலைவராகப் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மானக்கஞ்சாறர் என்னும் சிவ பக்தரின் மகளளுடன், ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணநாளும் வந்தது.
அன்று மானக்கஞ்சாறர் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்து, பஞ்சவடி செய்ய மணப்பெண்ணின் நீண்ட தலைமுடியை அறுத்துத் தர கோரினார். தீவிர சிவ பக்தரான மானக்கஞ்சாறரும் மணநாள் என்றும் பாராமல் மகளின் சம்மதத்துடன் நீண்ட தலைமுடையை சிவனடியாருக்கு அறுத்துக் கொடுத்துவிட்டார். அந்த நேரம் வந்த மணமகன் ஏயர்கோன் கலிக்காம நாயனார், கூந்தல் இல்லாமல் குனிந்து நிற்கும் மணப்பெண்ணைக் கண்டார். சிவனடியாருக்காகவும், பெற்றோரின் வாக்குக்காகவும் கூந்தலையே தியாகம் செய்த இவளைவிட சிறந்த பெண் எனக்கு எங்கு சென்றாலும் கிடைக்க வாய்ப்பில்லை என்று மகிச்சியுடன் கூறினார் . திருமணம் சிறப்பாக முடிந்தது. இதில் இருந்துதான் முடியைக் காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உருவானதாகச் சொல்லப்படுகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads