முதலாம் கார்க்கோவ் சண்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் கார்க்கோவ் சண்டை (First Battle of Kharkov) 1941ல் இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்தது. இது சோவியத் ஒன்றியத்தின் மீது ஜெர்மானியப் படையெடுப்பான பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகும். இதில் ஜெர்மானியப் படைகள் தற்கால உக்ரைனில் உள்ள கார்க்கோவ் (கார்கீவ்) நகரைச் சுற்றி வளைத்துக் கைப்பற்றின.
கார்க்கோவ் நகரம் மேல்நிலை உத்தியளவில் சோவியத் ஒன்றியத்தின் மிக முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-தெற்கு உக்ரைன், டினீப்பர், கிரிமியா, காக்கஸ், டோன்பாஸ் போன்ற பகுதிகளை ஒன்றிணைக்கும் மையமாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் முக்கிய போர் டாங்கான டி-34 ரக டாங்குகளைத் தயாரிக்கும் மாபெரும் தொழிற்சாலையும் அங்கு அமைந்திருந்தது. மேலும் மாஸ்கோவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஜெர்மானியப் படைகளை கார்க்கோவைத் தளமாகக் கொண்ட சோவியத் படைகள் பக்கவாட்டில் தாக்கும் சாத்தியமிருந்தது. இக்காரணங்களால் கார்க்கோவ் நகரைக் கைப்பற்றா ஜெர்மானிய உத்தியாளர்கள் முடிவு செய்தனர். ஜெர்மானிய ஆர்மி குரூப் தெற்கின் ஒரு பிரிவான 6வது ஆர்மியிடம் நகரைக் கைப்பற்றும் பொறுப்பு தரப்பட்டது. சோவியத் தரப்பில் 38வது ஆர்மி நகரைப் பாதுகாத்து வந்தது.
சண்டை தொடங்கும் முன்னரே நகரை நீண்ட நாள் பாதுகாக்க முடியாது என்பதை உணர்ந்த சோவியத் தளபதிகள், நகரின் தொழிற்சாலைகளைக் காப்பற்றுவதை முக்கிய இலக்காகக் கொண்டனர். கார்க்கோவின் தொழிற்சாலைகள் பிரித்தெடுக்கப்பட்டு கிழக்கே கொண்டு செல்லப்படும் வரை ஜெர்மானியப் படைகள் நகரைக் கைப்பற்றாது தடுக்க 38வது ஆர்மிக்கு உத்தரவிட்டனர். அக்டோபர் 20ம் தேதி ஜெர்மானியப் படைகள் கார்க்கோவ் நகரைத் தாக்கின. நான்கு நாட்கள் வரை சோவியத் பாதுகாவல் படைகள் நகரைப் பாதுகாத்தன. அக்டோபர் 24ம் தேதி நகர் ஜெர்மானியப் படைகள் வசமான போது, அதன் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை பிரித்தெடுக்கபபட்டு பாதுகாப்பாக சோவியத் ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பட்டுவிட்டன.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads