முதலாம் யோவான் (திருத்தந்தை)

From Wikipedia, the free encyclopedia

முதலாம் யோவான் (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை புனித முதலாம் யோவான் (சுமார் 470 – மே 18, 526) கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 523 முதல் 526 வரை இருந்தவர். சியன்னா நகரில் (Siena) பிறந்த இவர், திருத்தந்தையான போது மிகவும் நலிவுற்று இருந்தார்.

விரைவான உண்மைகள் புனித முதலாம் யோவான், ஆட்சி துவக்கம் ...

இவரின் எதிர்ப்பையும் மீறி, ஓஸ்த்ரோகாதிக் பேரரசன் தியோடோரிக் (Theodoric the Great) இவரை ஆரியனிச கொள்கையை சட்டப்பூர்வமாக ஏற்க, ஏவினான். இவ்வாறு செய்யாவிடில் கிழக்கில் கிறித்தவர்களுக்கு எதிராக கலகம் எழும் என்று இவரை மிரட்டினார். ஆனால் இவர் இரவேனாவுக்கு திரும்பியபோது, இவர் தனக்கெதிராக திட்டம் தீட்டியதாக அஞ்சி, தியோடோரிக் இவரை சிறையில் அடைத்தான். அங்கே கவனிப்பார் யாருமில்லாமல் இவர் இறந்தார்.

இவரது மீபொருட்கள் பின்னர் உரோமையில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இவர் கலையில் சிறைபட்டவராய் சித்தரிக்கப்படுகின்றார். இவரின் விழாநாள் மே 18.

மேலதிகத் தகவல்கள் கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads