முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில்
தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஓர் ஆஞ்சநேயர் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் வனப்பகுதியில் உள்ள ஓர் அனுமன் கோயிலாகும். இக்கோயிலை அடைய பேருந்து வசதி உண்டு பொம்மிடி முதல் தர்மபுரி வரை தர்மபுரியில் இருந்து பொம்மிடி வரை கோவில் வழியாக அரசு பேருந்து இயக்கப்படுகிறது சாலைவழியாகவும் ரயில் மூலமாகவும் வந்துடையலாம் .[1]
Remove ads
கோயில் சூழல்
இக்கோயிலைச் சுற்றி குன்றுகளும், மரங்கள் சூழ்ந்த நிலையில் அவற்றிற்கு இடையில் சலசலக்கும் ஓடைகள் அதன் கரையில் உள்ள ஒரு பாறையில் ஏழு அடி உயர ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளா்.
கோயில்பற்றிய கதை
தருமபுரி, சேலம் இருப்புப்பாதை போடப்பட்டபோது பாதைக்கு இடையூராக ஒரு ஆஞ்சநேயர் சிலை இருந்ததாகவும், இதனால் அதை அப்புறப்படுத்தினர். ஆஞ்சநேயரை அப்புறப்படுத்தும் பணிக்கு பொறுப்பாளராக இருந்த பொறியாளருக்கு இறப்பு ஏற்பட்டது. அவர் இறக்கும் தறுவாயில் தெய்வக்குற்றத்தால் தனக்கு இந்நிலை ஏற்பட்டதாக வருந்தி, ஆஞ்சநோயர் சிலை அகற்றப்பட்ட இடத்திற்கு அருகிலேயே புதியதாக கோயில் கட்டுமாறு தன் குடும்பத்தினரைக் கேட்டுக்கொண்டார். அவர் இறந்தபிறகு அவரின் குடும்பத்தார் ஒரு சிற்பியை அழைத்துவந்து தற்போது வழிபாட்டில் உள்ள இந்த ஆஞ்சநேயர் சிலையை வடித்ததாக செவிவழிச் செய்தி நிலவுகிறது. [2]
Remove ads
கோயிலமைப்பு
இந்த ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பத்தைச் சுற்றி 1966 இல் மண்டபம் கட்டப்பட்டது. மண்டபத்தின் மேற்பகுதியில் சுதையால் நின்ற நிலையில் இராமர் சீதை, இலக்குவன் ஆகியோர் உள்ளது போலவும் இராமனின் காலடியில் அனுமான் வணங்கிய நிலையில் இருப்பதுபோன்ற உருவ அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads