முத்து வீரியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்து வீரியம் ஒரு தமிழ் இலக்கண நூல். ஐந்திலக்கணமும் கூறுவது. திருச்சிக்கு அருகில் உள்ள உறையூரைச் சேர்ந்தவரான முத்துவீரர் என்பவரால் இயற்றப்பட்டது. இவரை முத்துவீர உபாத்தியாயர் எனவும் அழைப்பர். இறுதிக் காலத்தில் இவர் சென்னையில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். இவர் சார்ந்த சமயம் பற்றி நூலில் வெளிப்படையாக எதுவும் கூறப்படாவிட்டாலும், அதில் காணப்படும் சில குறிப்புகளை வைத்து இவர் சைவ சமயத்தினரென்று கருதுவர். [1].
Remove ads
நூலமைப்பு
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என்னும் ஐந்து பிரிவுகளைக் கொண்டு அமைந்தது இந்நூல். இப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் மும்மூன்று இயல்களாக மொத்தம் 15 இயல்கள் அமைந்துள்ளன:
- எழுத்ததிகாரம்: எழுத்தியல், மொழியியல், புணரியல்
- சொல்லதிகாரம்: பெயரியல், வினையியல், ஒழிபியல்
- பொருளதிகாரம்: அகவொழுக்கவியல், களவொழுக்கவியல், கற்பொழுக்கவியல்
- யாப்பதிகாரம்: உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல்
- அணியதிகாரம்: சொல்லணியியல், பொருளணியியல், செய்யுளணியியல்
ஆசிரியப்பாக்களால் அமைந்த இந்த நூலில் மொத்தம் 1289 பாக்கள் உள்ளன. தமிழ் மரபைத் தழுவி அமைந்த இந்நூல் ஐந்திலக்கண நூல்களுள் மிகவும் விரிவானது[2]. இது 96 வகைச் சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறுகின்றது.
Remove ads
குறிப்புகள்
உசாத்துணைகள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads