முத்து காமிக்ஸ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முத்து காமிக்ஸ் பிரகாஷ் பதிப்பகத்தாரால் பதிப்பித்து தமிழில் வெளிவரும் ஒரு சித்திரக் கதை இதழ். லயன் காமிக்ஸ், திகில் காமிக்ஸ், மினி லயன் காமிக்ஸ், ஜூனியர் லயன் ஆகியவை தொடர்புடைய சித்திரக்கதை இதழ்கள் எனக் கூறப்படக் காரணம் அனைத்துப் புத்தகங்களையும் பிரகாஷ் பதிப்பகத்தாரே பதிப்பித்து வெளியிடுகின்றமை.

சௌந்தரபாண்டியன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட முத்து காமிக்ஸ் புத்தகங்கள் தொடர்ந்தும் அவரது மகன் எஸ்.விஜயனினால் கொண்டு நடத்தப்படுகின்றது. பல்வேறு வகையான தமிழ் வரைகதை புத்தகங்களும் வெளிவருவது நின்றபின்னாலும் முத்து காமிக்ஸ் இன்றும் வெளிவருகின்றமை குறிப்பிடப்படவேண்டியதாகும்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads