மும்பை மோனோரயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மும்பை மோனோரயில் என்பது மும்பை நகரில் அமைந்துள்ள ஒற்றைத் தண்டூர்தி போக்குவரத்து ஆகும்.
Remove ads
சிறப்பம்சங்கள்
அதன் சிறப்பம்சங்களில் பதின்மூன்று கீழே தரப்படுகின்றன:
- இந்தியாவின் முதல் மோனோரயில், உலகின் இரண்டாவது நீண்ட தூர மோனோரயில்[3][4][5] என்ற பெருமை மும்பையில் ஜெகப் வட்டத்திலிருந்து வாடலா வழியாக செம்பூர் ரயில் நிலையம் செல்லும் இந்த சேவையை சேரும்.
- இருபது கிலோமீட்டர் தூரம் சேவை தரும் இந்த ரயிலினால் மூன்று இலட்சம் மக்கள் பயனடைவார்கள்
- சுமார் 80,000 பேருந்து பயணங்கள், 28,000 டாக்ஸி மற்றும் ஆட்டோ பயணங்கள் இதனால் மிச்சமாகும்.
- ரயில் பாதையோரம் (2 கிலோமீட்டர் சுற்றளவில்) இருக்கும் 22 இலட்சம் மக்கள் இதனால் பயனடைவார்கள்
- முதல் கட்ட மோனோரயில் 11 நிறுத்தங்கள் கொண்டதாக அமையும். 25 நிமிடங்களில் சேருமிடத்தினை அடையும்.
- இரண்டாம் கட்டம் 8.2 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகவும் சேருமிடத்தினை 19 நிமிடங்களிலும் அடையும். அதில் ஏழு நிறுத்தங்கள் இருக்கும்.
- முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட சேவை உண்டு.
- ஒவ்வொரு நான்கரை நிமிடங்களுக்கு ஒரு ரயில்.
- மொத்தம் பதினெட்டு ரயில் நிலையங்கள் -- ஒவ்வொன்றும் சமச்சீர் நிலத்திலிருந்து பதினோரு அடி உயரத்தில்.
- நூற்று ஐம்பது மக்கள் கொள்ளளவு கொண்ட பெட்டிகள்.
- ஒவ்வொரு ரயிலிலும் நான்கு பெட்டிகள். மொத்தம் 600 பேர் பிரயாணம் செய்யலாம்.
- எட்டு முதல் பத்து பேருந்து கொள்ளளவுக்கு ஒரு மோனோரயில் சமம்.
- இன்னும் பல தடங்களில் மோனோரயில் திட்டமிடப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு மலபார் மலை முதல் பந்திரா-குர்லா (ஹாஜி அலி தர்கா வழியாக)
Remove ads
கட்டுமானம்
இதன் கட்டுமானம் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
போக்குவரத்து துவக்கம்
மோனோ ரயில் திறப்புவிழா பெப்ரவரி 1 2014 அன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் பெப்ரவரி 2 2014 பயணம் செய்யலாம்[6][7].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads