முரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முரசு என்பது ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. ஒரு அரசனின் அடையாளங்களான செங்கோல், கொடி, மாலை முதலியவற்றுள் முரசும் அடங்கும். [1]

முரசு வகை
இந்த முரசுகளில் மூன்று வகை உண்டு.
- வீர முரசு
- தியாக முரசு
- நியாய முரசு
வீர முரசு
இது போர்க் காலங்களில் பயன்படுத்தப்பட்ட முரசாகும். போருக்குச் செல்லும் முன்னும், போர் நடக்கும் போது அதன் நிகழ்வுகளை அறிவிப்பதற்காகவும், வீரர்களுக்கு உற்சாகம் தருவதற்கும், போர் முடிந்த பின்பு வெற்றி தோல்வியை அறிவிப்பதற்கும் 'முரசு கொட்டுதல்' அக்கால வழக்கம்.
இந்த முரசிலிருந்து வெளிவரும் ஒலி வீர உணர்வினைத் தோற்றுவிப்பதாக இருக்கும். இந்த முரசு வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த மேடையை முரசுக் கட்டில் என்று சொல்வர்.
நியாய முரசு
நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது.
மேலும், அன்றைய காலத்தில் அரசனிடம் நீதி கேட்டு வருபவர்களுக்கு அரசன் மற்றும் ஆன்றோர் சான்றோர் முன்னிலையில் விசாரணை நடக்கும். அப்படிப்பட்ட விசாரணைகளில் அதை காண விரும்பும் மக்களும் இடம்பெறுவர். அவ்வாறு ஒரு விசாரணை நடக்கும் போது, அதை மக்களுக்கு தெரியப்படுத்த இந்த நியாய முரசைப் பயன்படுத்துவார்கள்.
கிராமங்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களில், பஞ்சாயத்துக்கள் நடக்கும் முன்னர், ஒருவர் முரசொலித்து ஊர் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுப்பதை உங்களால் காண இயலும். அது பண்டைய காலங்களில் புழங்கி வந்த நியாயமுரசின் தற்கால வடிவமே ஆகும்.
(மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)
தியாக முரசு
வீரத்தையும், நீதியையும் மட்டுமல்ல கொடைப் பண்பைப் போற்றுவதிலும் தமிழர்கள் சளைத்தவர்கள் இல்லை. அக்காலத்தில், யாரேனும் வறியவர்களுக்குக் கொடை வழங்க விரும்பினால், ஒரு முரசை கொட்டி வறியவர்களை வரவேற்பார்கள். 'ஒரு கொடையானது கருணையோடும், மரியாதையோடும் தரப்பட வேண்டும்' என்ற கருத்துக்குச் சான்றாக அந்த முரசு ஒலிக்கும். அதன் பெயரை தியாகமுரசு.
Remove ads
இவற்றையும் காணவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads