முருகு சுந்தரம்

தமிழ்க் கவிஞர் From Wikipedia, the free encyclopedia

முருகு சுந்தரம்
Remove ads

முருகு சுந்தரம் (Murugu Sundaram, 26 திசம்பர் 1929 – 12 சனவரி 2007) தமிழ்க் கவிஞராவார். இவரை மறுமலர்ச்சிக் கவிஞர் என்று போற்றுகின்றனர்.[1]

விரைவான உண்மைகள் முருகு சுந்தரம், பிறப்பு ...

வாழ்க்கை வரலாறு

1929ஆம் ஆண்டு திருச்செங்கோடு ஊரில் முருகேசன் - பாவாய் தம்பதியனருக்கு மகனாக முருகுசுந்தரம் பிறந்தார். இளநிலை கல்வியும், புலவர் பட்டமும் பெற்று மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 1960ஆம் ஆண்டு தனது முதல் கவிதையை எழுதினார்.

இயற்றிய நூல்கள்

முருகு சுந்தரம் இயற்றிய இருபத்து ஆறு நூல்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.[2]

  1. அரும்புகள் மொட்டுகள் மலர்கள் (நூல்)
  2. இந்திய இலக்கியச் சிற்பிகள் (நூல்)
  3. எரிநட்சத்திரம் (நூல்)
  4. கட்டடமும் கதையும் (நூல்)
  5. கடை திறப்பு (நூல்)
  6. காந்தியின் வாழ்க்கையிலே (நூல்)
  7. குயில் கூவிக்கொண்டிருக்கும் (நூல்)
  8. குயில்களும் இளவேனில்களும் (நூல்)
  9. கென்னடி வீர வரலாறு (நூல்); 1965; சிவலிங்கம் பப்ளிஷிங் ஹவுஸ், ஈரோடு.
  10. சந்தனப்பேழை (நூல்)
  11. சுரதா ஓர் ஒப்பாய்வு (நூல்)
  12. தமிழகத்தில் குறிஞ்சி வளம் (நூல்)
  13. தீர்த்தக் கரையினிலே (நூல்)
  14. பனித்துளிகள் (நூல்)
  15. பாட்டும் கதையும் (நூல்)
  16. பாரதி பிறந்தார் (நூல்)
  17. பாரும் போரும் (நூல்)
  18. பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் (நூல்)
  19. பாவேந்தர் நினைவுகள் (நூல்)
  20. பாவேந்தர் படைப்பில் அங்கதம் (நூல்)
  21. புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் (நூல்)
  22. புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் (நூல்)
  23. மலரும் மஞ்சமும் (நூல்)
  24. முருகுசுந்தரம் கவிதைகள் (நூல்)
  25. வள்ளுவர் வழியில் காந்தியம் (நூல்)
  26. வெள்ளையானை (நூல்)
Remove ads

ஆதாரங்களும் மேற்கோள்களும்

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads