முல்கிரிகல அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முல்கிரிகல அருங்காட்சியகம் அல்லது முல்கிரிகல நூதனசாலை (Mulgirigala Archaeological Museum) என்பது இலங்கையின் முல்கிரிகலவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.[1] இவ்வருங்காட்சியகம் இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. முல்கிரிகல மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முல்கிரிகல அருங்காட்சியகத்தில் புராதன காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓலைச்சுவடிகள், கருவிகள், பழைய அறிக்கைகள், ஓவியங்கள் ஆகியவையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் முல்கிரிகலவில் காணப்படும் விகாரை ஒன்றினது வரலாற்றுத் தகவல்கள் அனைத்தையும் இங்கு அறிந்துகொள்ளலாம்.[2] இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் இவ்வருங்காட்சியகம் பிரதேச வாரியான அருங்காட்சியகங்களுள் தகவல் திரட்டும் அருங்காட்சியங்களுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads