மூக்குக் கண்ணாடி

From Wikipedia, the free encyclopedia

மூக்குக் கண்ணாடி
Remove ads

மூக்குக் கண்ணாடி என்பது பார்வை குன்றியவர்கள் தெளிவாகப் பார்ப்பதற்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகும். சட்டம் ஒன்றில் இரண்டு கண்ணாடி வில்லைகள் பொருத்தப்பட்டு இவை உருவாக்கப்படுகின்றன. சட்டம் வில்லைகளைத் தாங்குவதோடு முகத்தில் அணியும் படியான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். இவற்றின் முன்பகுதி மேல் மூக்குப் பகுதியில் தாங்கப்படுவதன் காரணமாகவே இது மூக்குக் கண்ணாடி எனப் பெயர் பெற்றது. மூக்குக்கண்ணாடியில் குவிவு வில்லை, குழிவு வில்லை என இரண்டு வகையான வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன. கண்பார்வை குறைந்தவர்கள் கண்களை மருத்துவர் ஒருவரிடம் பரிசோதித்து அவரது ஆலோசனைப்படி தங்களது தேவைக்கேற்றவயாறு மூக்குக்கண்ணாடிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பொழுது பலர் அழகுக்காகவும் மூக்குக்ப கண்ணாடியை பயன்படுத்துகின்றனர். அமரிக்கர்களில் கண்பார்வை குறைந்தவர்களின் எண்ணிக்கை 1970களில் இருந்து இரு மடங்காகியுள்ளது. அமெரிக்காவின் 3/4 பகுதி மக்கள் மூக்குக் கண்ணாடி அணிகின்றனர். 65-75 வரையான வயது எல்லையில் காணப்படும் மக்களில் 93% மூக்குகண்ணாடிகளை அணிகின்றனர்.[1][2]

Thumb
நவீன மூக்குக் கண்ணாடி
Thumb
இல்லைகளில் 1805-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட மூக்குக் கண்ணாடி
Remove ads

வகைகள்

மூக்குக் கண்ணாடிகள் பல்வேறு விதமான வகைகளில் வெளிவருகின்றன. அவை அதன் முக்கிய செயற்பாடுகளின் படி வகைப்படுத்தப்படுகின்றன. எனினும் இவை சூரியக்க கண்ணாடி, பாதுகாப்புக் கண்ணாடி போன்று கலவையாகவும் வெளிவருகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads