மூன்றாம் இராஜராஜ சோழன்

சோழ மன்னர் From Wikipedia, the free encyclopedia

மூன்றாம் இராஜராஜ சோழன்
Remove ads

பொ.ஊ. 1218ல் சூன் 27க்கும் சூலை 10க்கும் இடையே மூன்றாம் இராசராசன் பட்டத்துக்கு வந்தான் என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தச் செய்தி அவன் சொந்த உரிமையில் அரியணை ஏறியதைக் குறிப்பிடவில்லை. அடுத்து பட்டத்திற்கு வரவேண்டியவன் என்று முந்திய அரசனால் ஏற்று, அறிவிக்கப்பட்ட நாளே என்று கொள்ளலாம். சுந்தர பாண்டியன், சோழ நாட்டைப் படையெடுத்தது, சோழர்களுக்காக வீர நரசிம்மன் தலையிட்டது ஆகிய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு இவன் அரசனாகும் உரிமையுடையவன் என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கலாம்.

Remove ads

ஆட்சி

மூன்றாம் இராசராசனின் ஆட்சி துன்பங்களுடனும் துயரங்களுடனும் தொடங்கியது. தொடக்கத்தில் ஏற்பட்ட இன்னல்கள் பிற்காலத்தில் நேரவிருக்கும் பெருங்கேடிற்கு முன்னறிவிப்பாக இருந்தன. சோழரைக் காப்பாற்ற மீண்டும் போசாளர் உதவிக்கு வர வேண்டியதாயிற்று.

சுந்தர பாண்டியனின் படை எழுச்சி

மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். அடிமைப்பட்டுக் கிடந்த தனது மக்களை வீறு கொண்டு எழுப்பித்தவன் சுந்தர பாண்டியனே ஆவான். மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே களங்கங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான் ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராச ராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லமால் இருப்பதை அறிந்த சுந்தர பாண்டியன் விடுதலை வேட்கை கொண்டு வீறு கொண்டு எழ வேண்டிய சமயம் இதுவே என்று சோழனை எதிர்த்து போர்க்களம் புகுந்தான் பாண்டியன்.

மூன்றாம் ராஜ ராஜ சோழன் சோழர் குலத்தில் வந்தவன் ஆனாலும் அவனுள் அறிவாற்றலும் வீரமும் இல்லாமல் இருந்தான். குலோத்துங்கனின் ஆற்றலின் நிழலில் இருந்த ராஜ ராஜ சோழன், குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சி புரிவதற்கு சற்றும் திறம் படைத்தவனாக இருக்க வில்லை. இதனால் தொன்று தொட்டு வந்த சோழர்களின் சாம்ராஜ்யம் தொய்வடைந்தது. சந்தபத்திற்காகக் காத்திருந்த பாண்டியன், தக்கச் சமயத்தில் படை எடுத்து வந்து சோழப் பேரரசை அகப்படுத்திக் கொண்டான். தஞ்சை, தில்லை வரை படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராஜ ராஜ சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராஜ ராஜ சோழன்.

கத்திய கர்நாமிதாம் - நூல் சித்தரிக்கும் உண்மை

சுந்தர பாண்டியனுக்கு அடிபணிந்து ஆட்சி புரிந்து வந்த ராஜ ராஜ சோழன், போசள மன்னன் வீர நரசிம்மனின் உதவியைப் பெற்றான். இதனால் சோழ அரசு வலுவடைந்து விட்டது என்று எண்ணிய அவன், பாண்டியனுக்குக் கட்ட வேண்டிய கப்பத்தினைக் கட்ட மறுத்தான். இதனால் பாண்டியனுக்கும் சோழனுக்கும் மீண்டும் போர் நிகழ்ந்தது . இந்த போரில் படு தோல்வி அடைந்த சோழன் எங்கே சென்றான் என்பதை வரலாற்றில் கண்டறிய முடியவில்லை. ஆனால் பாண்டியன் மகுடாபிஷேகம் செய்தமையை அவனது மெய் கீர்த்தி கூரூகின்றது.

கோப்பெருஞ்சிங்கன்

போரில் தோல்வியை தழுவியதை சோழனின் மெய்க் கீர்த்தியால் நாம் அறிய முடியாது, மேலும் தோல்விக்குப் பின்பு சோழனின் நிலையை பற்றி கத்திய கர்நாமிதம் என்னும் நூல் குறிக்கின்றது. இதன் மூலம் திருவயிந்திபுரம் கல்வெட்டின் குறிப்புகள் நமக்கு அறிவிக்கின்றது யாதெனில் சோழன் சிறையடைக்க பட்டதே ஆகும். வயலூர் கல்வெட்டின் மூலம் நாம் அறிவது கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசன் ராச ராச சோழனுக்கு அடிபணியாமல் ராச ராசனை சிறை எடுத்தான். சோழனுக்கு அடிபணியாமல் ஆட்சி புரிந்து வந்த சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன், தக்க சமையம் அறிந்து கப்பம் கட்டு வதை நிறுத்தினான். சோழனை சிறைப்படுத்தினான், சோழனின் செல்வங்களை கொள்ளை அடித்தான். இவனது அடாவடி செயல்களை அறிந்த போசள மன்னன், படை எடுத்து வந்தான். வீர நரசிம்மன் திருவயிந்திபுரம் வரை சென்று கோப்பெருஞ்சிங்கனின் செல்வங்களைக் கைப்பற்றினான், அவனது செல்வம், மக்கள், பெண்கள் ஆகியவற்றை அழித்து கைப்பற்றினான். வீர நரசிம்மனின் வருகையை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் ராஜ ராஜ சோழனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அத்துடன் சோழன், போசலனுடன் சமாதானம் செய்து கொண்டான்.

ராச ராச சோழனை மீட்ட பின்பு காவேரிக் கரை வரை சென்று பாண்டியர்களுடன் போர் புரிந்தான் வீர நரசிம்மன். காவேரிக் கரை வரை சோழர்களின் நிலப்பரப்பு அகன்றது. இவ்வாறு சோழர்கள் போசளர்களின் ஆளுகைக்குட்பட்டு, அவர்களது ஆட்சியைச் சார்ந்தே இருந்தனர்.

வீர நரசிம்மன்

பாண்டியன் மீது படை எடுத்து வந்த போது அதிகமாக அக்கறை காட்டாத போசள மன்னன் வீர நரசிம்மன், சோழர்களைப் பழையாறை நகரம் வரை சுருக்கிய பாண்டியர்களுடன் அவன் சோழர்கள் மீது போர் புரிந்த போது சேர்ந்து கொண்டான். பாண்டியர்கள் சோழர்களை வென்று போசள தேசம் பக்கம் திரும்பக் கூடும் என்று சிந்தித்த வீர நரசிம்மன், இதற்கு மேலும் பாண்டியர்களை வளர விடுவது ஆபத்து என்ற காரணத்தாலும், பெண் உறவு பூண்டதாலும் சோழர்களுக்கு உதவுவதற்கு முன் வந்தான்.

மூன்றாம் ராசேந்திர சோழன்

தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராஜ ராஜ சோழன், தனது இயலாமையை உணர்ந்தே இருந்தான். தனது நாற்பதாம் வயதில் தனது மகன் மூன்றாம் ராசேந்திரச் சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சிக் காலத்திலேயே அவனை மன்னனாக அறிவித்தான்

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads