மூன்றாம் கோவிந்தன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூன்றாம் கோவிந்தன் (793-814 ), என்பவன் ஒரு புகழ்பெற்ற இராஷ்டிரகூடப் பேரரசனாவான். இவனது தந்தை துருவன் தரவர்சன் ஆவான். இவனது படைகள் தெற்கே கன்னியாகுமரியில் இருந்து, வடக்கே கன்னோசி வரையிலும் கிழக்கே வாரனாசி முதல் மேற்கில் பரூச் வரையிலும் வெற்றிகளை குவித்தது. இவனது பட்டப்பெயர்கள் பிரபுதவர்சன், ஜகதுங்கன், அனுபமா, கீர்தி நாராயணன், பிரீத்தி வல்லபன், சிறீவல்லபன், விமலாதித்தன், அதிசயதவளா மற்றும் திரிபுவனதவளா. ஆகும் இத்தகவல் கி.பி.804 காலகட்டத்தைச்சேர்ந்த சோமேஷ்வரர் கோயில், பெங்களூர் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. இக்கல்வெட்டை வெட்டுவித்த கவுந்தபீ இவனது பட்டத்தரசி என்று அறியப்படுகிறது.
Remove ads
அரியணையில்
மூன்றாம் கோவிந்தன் பேரரசரசனான பின் இவனது குடும்பத்தினரின் எதிர்ப்பைச் சமாளிக்க நேர்ந்தது. இவனுடைய அண்ணன் கம்பராசா (இவன் ஸ்தம்பா என்றும் அழைக்கப்பட்டான்) பன்னிரண்டு தலைவர்களை தனது அணியில் சேர்த்துக் கொண்டு கோவிந்தனுக்கு எதிராக போர்புரிந்தன் என நவசாரி பதிவுகள் குறிப்பிடுகின்றன.[1] சிஸ்வயி மற்றும் சஞ்சன் போன்ற பதிவுகள் கோவிந்தனின் மற்றொரு சகோதரனான இந்திரன் கோவிந்தனுக்கு ஆதரவாக இருந்து அண்ணன் கம்பராசாவின் கூட்டுப் படைகளுக்கு எதிராக வெற்றிபெற்றதாகக் கூறுகிறது.[2] மேலைக்கங்க மன்னன் இரண்டாம் சிவமாறன் கம்பராசாவின் அணியில் இருந்து மூன்றாம் கோவிந்தனை எதிர்த்தான் ஆனால், போரில் தோல்வியுற்றுக் கைதியான பிறகு சிவமாறனைக் கோவிந்தன் மன்னித்து கங்க நாட்டை ஆட்சி செய்ய அனுமதித்தான்.
Remove ads
கன்னோஜ் வெற்றி
தற்கால கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில் உள்ள மயூர்கண்டியே மூன்றாம் கோவிந்தனின் தலைநகராக இருந்தது. அங்கிருந்து கி.பி 800-ல் தனது வடதிசை படையெடுப்பை மேற்கொண்டான். கூர்ஜர-பிரதிகாரப் பேரரசர் இரண்டாம் நாகபட்டர் (800–833), பாலப் பேரரசு தர்ம பாலர் ஆகியோரின் கன்னோசி, சாரய்யுதா நகரங்களை வெற்றிகொண்டான். இரண்டம் நாகபட்டர் போரில் தோற்று போர்க்களத்திலிருந்து ஓடினான். மூன்றாம் கோவிந்தனின் யானைகளும், குதிரைகளும் இமயத்தின் பனியிலிருந்து கரைந்து வந்த புனிதமான கங்கை நீரைக் குடித்ததாக அவனது சாசனங்கள் புகழ்கின்றன.[2]பிறகு பரமாரப் பேரரசின் மால்வா பகுதியையும் மூன்றாம் கோவிந்தன் வென்றான்.[3]மகதம் மற்றும் வங்காள ஆட்சியாளர்கள்கூட இவனுக்குப் பணிந்தனர். சௌராட்டிர தீபகற்பம் (தெற்கு மற்றும் மத்திய குஜராத்) பகுதியை வெற்றி கொண்டு தனது சகோதரனான இந்திரனிடம் அப்பகுதியின் ஆட்சியை ஒப்படைத்தான். இதன் விளைவாக இராஷ்டிரகூடப் பேரரசின் ஒரு கிளை அப்பகுதியில் தோன்றியது.[4] இதனால் மூன்றாம் கோவிந்தன் வென்ற பகுதிகளான வடக்கே மால்வா முதல் தெற்கே காஞ்சிபுரம் வரையான தனது பேரரசைக் கட்டிக்காக்க இயன்றது.[4]
Remove ads
தெற்கின் நிலை
தமிழ் நாட்டின் மூவேந்தர்களான சோழர்கள் , பாண்டியர்கள்,சேரர் ஆகியோர் மூன்றாம் கோவிந்தனுக்குக் கப்பம் செலுத்தும் நிலையில் இருந்தனர்.[5] இராஷ்டிரகூடப் பேரரசின் வெற்றிகள் உச்ச நிலையை அடைந்திருந்தது.[6], மூன்றாம் கோவிந்தன் கி.பி.814 இல் இறந்தான்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads