மெக்ரன்கர்

இராசத்தானிலுள்ள ஒரு கோட்டை From Wikipedia, the free encyclopedia

மெக்ரன்கர்map
Remove ads

மெக்ரன்கர் (Mehrangarh) என்பது இந்தியாவின் இராசத்தானில் உள்ள சோத்பூரில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும். இது ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளாது. சுற்றியுள்ள சமவெளிகளில் இருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் உள்ளது. வளாகம் 1,200 ஏக்கர் (486 எக்டேர்) பரப்பளவில் பரவியுள்ளது. இது ஆரம்பத்தில் 1459 ஆம் ஆண்டு ராத்தோர் குலத்தின் ராஜபுத்திர ஆட்சியாளரான ராவ் ஜோதாவால் கட்டப்பட்டது. இருப்பினும் தற்போதுள்ள கட்டமைப்புகளில் பெரும்பாலானவை 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.[1] 1806 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் மற்றும் பிகானேர் படைகளை வென்றதன் நினைவாக மகாராஜா மான் சிங்கால் கட்டப்பட்ட பிரதான நுழைவாயில் ஜெய் போல் ('வெற்றி வாயில்' என்று பொருள்படும்) உள்ளிட்ட ஏழு வாயில்கள் கோட்டையில் உள்ளன. பத்தேபோல் என்றா வாயில் முகலாயர்களுக்கு எதிரான மகாராஜா அஜித் சிங் வெற்றியை நினைவுகூறுகிறது.[2]

விரைவான உண்மைகள் மெக்ரன்கர், ஆள்கூறுகள் ...

இதன் எல்லைகளுக்குள், பல அரண்மனைகள், அவற்றின் சிக்கலான சிற்பங்கள் மற்றும் விரிவான முற்றங்கள், சாமுண்டி கோயில் மற்றும் பல்வேறு நினைவுச்சின்னங்களை வைத்திருக்கும் அருங்காட்சியகம் ஆகியவற்றைக் காணலாம். ஒரு வளைந்த சாலை கீழே நகரத்திற்குச் செல்கிறது. ஜெய்ப்பூரின் படைகளைத் தாக்கிய பீரங்கி குண்டுகளின் அடையாளங்கள் இன்றும் இரண்டாவது வாயிலில் காணப்படுகின்றன. கோட்டையின் வடகிழக்கில் கிரத் சிங் சோதாவின் கல்லறை மாடம் உள்ளது, அவர் மெக்ரன்கரைக் காக்கும் போரில் இறந்தார்.[3]

உலக புனித ஆவி விழா மற்றும் இராசசுதான் சர்வதேச நாட்டுப்புறக் கலைத் திருவிழா ஆகிய விழாக்கள் இங்கு நடைபெறும் குறிப்பிடத்தக்க திருவிழாக்களில் சில.

Remove ads

சொற்பிறப்பியல்

மெக்ரன்கரின் சொற்பிறப்பியல் சமசுகிருத வார்த்தைகளான 'மிகிர்' (சூரியன் என்று பொருள்) மற்றும் 'கர்' (கோட்டை என்று பொருள்) ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது. இந்த கோட்டைக்கு மிகிர்கர் என்று பெயரிடப்பட்டது. அதாவது 'சூரியனின் கோட்டை' - இது ஆளும் குலமான ரத்தோர் வம்சத்தின் குலதெய்வமான சூரியனிடமிருந்து புராண வம்சாவளியைக் குறிக்கிறது. ஒலிப்பு ரீதியாக இது இராசத்தானி மொழியில் 'மிகிர்கர்' என்பதிலிருந்து 'மெக்ரன்கர்' ஆக உருவானது.

Remove ads

சுற்றுலா ஈர்ப்புகள்

தேசிய புவியியல் நினைவுச்சின்னம்

ஜோத்பூர் குழுமம் - மலானி இக்னீயஸ் சூட் காண்டாக்ட் மீது கோட்டை கட்டப்பட்டுள்ளது. நாட்டில் புவி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் தேசிய புவியியல் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான புவியியல் அம்சம் 43,500கிமீ 2 பரப்பளவில் பரவியுள்ள தார் பாலைவனப் பகுதியில் காணப்படும் மலானி இக்னீயஸ் சூட்டின் ஒரு பகுதியாகும். இந்த தனித்துவமான புவியியல் அம்சம் இந்திய துணைக்கண்டத்தில் பிரீகாம்ப்ரியன் யுகத்தின் (பூமி வரலாற்றின் ஆரம்பகால பகுதி) கடைசி கட்டத்தை குறிக்கிறது.[4][5]

சாமுண்டி கோயில்

Thumb
சாமுண்டி தேவி கோவில்

சாமுண்டி ராவ் ஜோதாவின் விருப்பமான தெய்வமாகும். அவர் 1460 இல் பழைய தலைநகரான மாண்டூரிலிருந்து இச்சிலையைக் கொண்டு வந்து கோட்டையில் நிறுவினார். சாமுண்டி அரச குடும்பத்தின் குலதெய்வமாகும். மேலும் சோத்பூரின் பெரும்பாலான குடிமக்களால் வழிபடப்படுகிறார். விஜயதசமி கொண்டாட்டங்களின் போது மக்கள் கூட்டம் மெக்ரன்கரில் திரளும்.

ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா

ராவ் ஜோதா பாலைவனப் பாறைப் பூங்கா, மெக்ரன்கர் கோட்டையை ஒட்டி 72 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. பூங்காவில் சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்ட பாலைவனம் மற்றும் வறண்ட நில தாவரங்கள் உள்ளன.[6][7] இந்த பூங்கா 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, கோட்டையை ஒட்டிய மற்றும் கீழே உள்ள ஒரு பெரிய, பாறைப் பகுதியின் இயற்கை சூழலை மீட்டெடுக்க முயற்சி செய்து, பிப்ரவரி 2011 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தனித்துவமான எரிமலை பாறைகள் மற்றும் மணற்கல் அமைப்புகளைக் கொண்டுள்ளது.

Remove ads

2008 நெரிசல்

30 செப்டம்பர் 2008 அன்று, கோட்டையின் உள்ளே உள்ள சாமுண்டி தேவி கோயிலில் ஒரு மனித நெரிசல் ஏற்பட்டது. இதில் 249 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[8]

கலாச்சாரம்

Thumb
மெக்ரன்கர் கோட்டையின் இரவு காட்சி

கோட்டையின் நுழைவாயிலில் நாட்டுப்புற இசையை இசைக்கும் இசைக்கலைஞர்கள் உள்ளனர். அருங்காட்சியகம், உணவகங்கள், கண்காட்சிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் சந்தையும் கொண்டுள்ளது.[9] டிஸ்னி என்ற திரைப்பட நிறுவனம் 1994இல் வெளியிட்ட தி ஜங்கிள் புக் மற்றும் 2012 ஆம் ஆண்டு வெளியான த டார்க் நைட் ரைசஸ் போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு இந்த கோட்டையில் நடைபெற்றது.[10][11][12] இம்ரான் ஹாஷ்மி நடித்த அவரப்பன் படமும் இங்கு படமாக்கப்பட்டது.[13] 2015 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய இசையமைப்பாளர் சை பென் துசூர், ஆங்கில இசையமைப்பாளர் மற்றும் கித்தார் கலைஞர் ஜானி கிரீன்வுட் மற்றும் ரேடியோஹெட் தயாரிப்பாளர் நைகல் கோட்ரிச் உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் கூட்டு இசைத் தொகுப்பை இங்கு பதிவு செய்தனர். இந்த பதிவு அமெரிக்க இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ஜுனுன் என்ற ஆவணப்படத்தின் பொருளாக இருந்தது.[14][15] மார்ச் 2018 இல், பாலிவுட் படமான தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தானின் படக் குழுவினர் கோட்டையைப் பயன்படுத்தினர்;[16] நடிகர் அமிதாப் பச்சன் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தனது அனுபவத்தைப் பற்றிய ஒரு பிரதிபலிப்பு இடுகையை விட்டுவிட்டார்.[17]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

  • Crump, Vivien; Toh, Irene (1996). Rajasthan. London: Everyman Guides. p. 400. ISBN 1-85715-887-3.
  • Beny, Rolof; Matheson, Sylvia (1984). Rajasthan - Land of Kings. New York: The Vendome Press. p. 200 pages. ISBN 0-86565-046-2.
  • Tillotson, G.H.R (1987). The Rajput Palaces - The Development of an Architectural Style (First ed.). New Haven and London: Yale University Press. p. 224 pages. ISBN 0-300-03738-4.
  • SuryanagariJodhpur by Prem Bhandari
  • Maharaja Umaid Singhji by Prem Bhandari
  • Paintings from the royal collection of the Mehrangarh Museum Trust, Jodhpur பிரித்தானிய அருங்காட்சியகம்
Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads