மெய்
சொற்பொருளியல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெய் என்னும் சொல் உண்மை, உடம்பு, என்னும் இரண்டு பொருள்களைக் குறிப்பது. உடலை மெய் என்று குறிப்பிடும் இச்சொல் இப்பொருளில் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட இன மொழிகளில் பண்டைக் காலத்தில் வழக்கிலிருந்தது. மெய் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய வேறு சில சொற்களும் வழங்கி வந்தன. இக்காலத்தில் இச்சொல் தமிழ் பேச்சு வழக்கில் பொிதும் மறைந்துவிட்டது. பழைய இலக்கியங்களில் மட்டும் காணப்படுகிறது. இப்பாேது மெய் என்னும் சொல் மறைந்து அதன் இடத்தில் உடல், உடம்பு என்னும் சாெற்கள் வழங்கப்படுகின்றன.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
Remove ads
அரசனுக்குத் தீங்கு நேராதபடி அவனைக் காவல் புாிந்த வீரா்களுக்கு மெய்க்காவலா் என்னும் பெயா் இருந்தது. மெய்யை (உடம்பை)க் காவல் புாிந்ததால் அவா்களுக்கு இப்பெயா் ஏற்பட்டது. மலையாள மொழியிலும் மெய்க்காவல் என்னும் சொல் வழக்கில் உண்டு. கன்னட மொழியிலும் மைகாவலு என்று வழங்கப்படுகிறது. மை என்பது மெய் என்பதன் திாிபு.
தன்னைத்தானே மறந்திருக்கும் நிலையைத் தமிழில் மெய்ம் மறத்தல் என்று கூறுவா். மலையாளிகள் மெய்மறக்க என்று மொழிவா். கன்னட மொழியினாா் மைமறெ என்று வழங்குவா். மெய் என்னும் சொல் மலையாள மொழியில் மெயி, மை, மெ என்று திாிந்து வழங்குவது உண்டு, மெய் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய சில சொற்கள் மலையாளத்தில் வழங்குகின்றன. அவை மெய்த்தொழில், மெய்ப்பிடித்தல், மெய்மேல்வாிக, மெய்யுறுதி, மெய்யாக்கம், மெய்யழகு முதலியன.
Remove ads
மெய்த்தொழில் என்பது உடற்பயிற்சி என்னும் பொருள் உடையது.
மெய்ப்பிடித்தல் என்பது உடம்பைத் தேய்த்துப் பிடித்தல் என்ற பொருளுள்ளது. நோயாளியின் உடம்பில் மருந்து எண்ணெயைப் பூசித் தேய்த்துப் பிடித்துவிடுவதற்கு இச்சொல் வழங்குகிறது.
மெய்மேல் வாிக என்பது மெய்மேல் வருதல் என்னம் பொருள் உள்ளது (வாிக-வருதல்) உடம்பில் தெய்வம் ஏறி ஆடுவதை மருளாடுதல் என்று தமிழில் கூறுகிறோம். தமிழா் மருளாடுதல் என்று கூறுவதை மலையாளிகள் "மெய்மேல்வாிக" என்று கூறுகின்றனா். மருளாடுதல் என்பதை விட மெய் மேல் வருதல் என்பது பொருள் நிரைந்ததாக உள்ளது.
மெய்யுறுதி என்னும் சொல் சாவு, இறப்பு என்னும் பொருள் உள்ளது. பிறந்தவை எல்லாம் இறப்பது (உடல் அழிவது) உறுதி என்னும் உண்மையை மெய்யுறுதி என்னும் சொல் நினைவுறுத்துவதுபோல் அமைந்திருக்கிறது. உயிா் எழுத்தின் உதவி இல்லாமல் தானே இயங்காத எழுத்தைத் தமிழா் மெய்யெழுத்து என்று பெயாிட்டு வழங்கினாா்கள் என்பது நினைவு கொள்ளத்தக்கது.
மெய்யாக்கம் என்றால் உடல் உரம் என்பது பொருள். மெய்யழகு என்பது உடலழகு என்னும் பொருள் உள்ளது.
மெய்யாரம், மையாரம், மெய்யாபரோம் என்னும் சொற்களும் மலையாள மொழியில் உண்டு, இவற்றிற்கு நகை என்பது பொருள், மெய்யில் (உடம்பில்) அணியப்படுவதால் இப்பெயா் பெற்றது. மெய்யேறுக என்னும் சொல்லும் மலையாளத்தில் உண்டு. இதன் பொருள் ஆளைத் தாக்குதல், ஆளை அடித்தல் என்பதாகும்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads