மெய்க்கீர்த்தி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மெய்க்கீர்த்தி என்பது ஒரு கல்வெட்டினை நிறுவும் காலத்தில் ஆட்சியில் உள்ள அரசனின் உண்மையான புகழுக்குரிய செயல்களைக்கூறும் கல்வெட்டின் பகுதியாகும். தமிழ்நாட்டு மன்னர்கள் முன்னரே கல்வெட்டுக்களை நிறுவியிருந்தாலும் அவற்றில் விரிவான மெய்க்கீர்த்திகள் இருக்கவில்லை. சோழ மன்னன் முதலாம் இராசராசன் காலத்திலேயே கல்வெட்டுக்களில் விரிவான மெய்க்கீர்த்திகள் இடம்பெற்றன.[1][2][3]

முதலாம் இராசராச சோழன் மெய்க்கீர்த்தி

எடுத்துக்காட்டாக முதலாம் இராசராசனின் மெய்க்கீர்த்தி ஒன்றை இங்குக் காண்போம்.

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி
வேங்கை நாடுங் கங்க பாடியும்
தடிகை பாடியும் நுளம்ப பாடியும்
குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்
முரட்டெழிற் சிங்கள ரீழ மண்டலமும்
இரட்ட பாடி யேழரை யிலக்கமும்
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந்
தெண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்
னெழில்வள ரூழியு ளெலலா யாண்டுந்
தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்
தேசுகொள் கோராச கேசரி வர்மரான
உடையார் ஸ்ரீராச ராச தேவர்க்கு யாண்டு...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads