மெய்சி காலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மெய்சி காலம் (Meiji period, 明治時代?, Meiji-jidai), Meiji era) என்பது 1868 அக்டோபர் 23 முதல் 1912 சூலை 30 வரை அமைந்திருந்த சப்பானியப் பேரரசின் முதல் அரைக்காலப் பகுதியைக் குறிக்கிறது.[1] இக்காலப்பகுதியை சப்பானியப் பேரரசை ஆண்டவர் பேரரசர் மெய்சி ஆவார். இக்காலத்தில் சப்பானில் நடந்த சமுக, பொருளாதார, கல்வி போன்ற துறைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றமே மெய்சி மறுமீள்வு அழைக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட நிலமானிய சமூகம் மேற்கத்தைய சமூகமாக மாற்றமடைந்தது. இக்காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை மாற்றங்கள் சப்பானின் சமூக அமைப்பு, உள்ளூர் அரசியல், பொருளாதாரம், இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads