மெர்க்குரி (திரைப்படம்)

கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாக உள்ள உரையாடல் இல்லாத திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மெர்க்குரி (Mercury), கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்திலும் அவரின் தயாரிப்பிலும் 2018 ஏப்பிரல் 13ம் திகதி வெளியான ஒரு ஆவி திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் பிரபுதேவா, சனந்த், தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன், ரம்யா நம்பீசன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ்நாராயணன் [1] பின்னணி இசையை அமைத்துள்ளார், திருவின் ஒளிப்பதிவில், விவேக் அர்சன் படத்தொகுப்பில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஒரு மௌன திரைப்படம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்படத்தில் பல வசனங்களும், இசைகளும் உள்ளன.

விரைவான உண்மைகள் மெர்க்குரி, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

படப்பணிகள்

கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்திற்கு பின் அவர் பிரபுதேவாவுடன் ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக 2017ல் கூறினார். அதன்படி இத்திரைப்படம் இந்தியாவில் மலைப் பகுதிகளில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ஆரேழு பேர்தான் நடித்திருப்பதாகவும், இப்படம் ஒரு மாறுபட்ட முயற்சி என்றும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

இத்திரைப்படத்தில் பிரபுதேவா எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Remove ads

இசை

இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைத்துள்ளார்.[2] இப்படத்தில் இசையமைப்பளர் மிதூன் The Mercury Song எனும் பாடலுக்கு இசையமைத்துள்ளார். இப்பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். இப்படத்தில் ஒரேயொரு பாடல் மட்டுமே உள்ளது.

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads