மெல்பேர்ண் வக்ரதுண்ட விநாயகர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வக்ரதுண்ட விநாயகர் கோயில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரில் உள்ள த பேசின் என்ற புறநகரில் அமைந்துள்ள ஒரு விநாயகர் கோயிலாகும்.[1]

வரலாறு
கோயில் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் 1989-ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அப்போது காஞ்சி காமகோடி பீடம் ஒரு விநாயகர் விக்கிரகத்தை வழங்கியிருந்தது. அத்துடன் ஒரு வெண்கல விக்கிரகமும் வாங்கப்பட்டிருந்தது.[1] அங்கு வாழ்ந்த இந்துக்களின் பலத்த முயற்சியின் பின் பயன்படுத்தப்படாத ஒரு பழைய தேவாலயம் வாங்கப்பட்டு, ஸ்தபதிகளின் துணையுடன் 1991-92 ஆம் ஆண்டில் அது கோயிலாக்கப்பட்டு 1992 அக்டோபர் 11 ஆம் நாளில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.[1] இக்கோயில் மெல்பேர்ண் இந்து சங்கத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.
Remove ads
அமைப்பு
மூலத்தானத்தில் வக்ரதுண்ட விநாயகரையும் மற்றும் உரிய இடங்களில் சிவன், விட்டுணு, வள்ளி தெய்வானை சமேதரராக முருகன், அபிராமி, துர்க்கை, மற்றும் நவக்கிரகங்களையும் இந்தக் கோயில் கொண்டுள்ளது.
சிறப்பு நாட்கள்
தினமும் இக்கோயில் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் சிறப்பு நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன.
கோயில் நடவடிக்கைகள்
மெல்பேர்ண் இந்து சங்கம் 'சைவநெறி' என்ற பெயரில் செய்திப் பத்திரிகை ஒன்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் காலாண்டுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகிறது. இளைஞரை கோயில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் ஓர் இளைஞர் சங்கம் இக்கோயிலில் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
