மேர்க்குரித் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேர்க்குரித் திட்டம் (Project Mercury) என்பது மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளித் திட்டமாகும். இத்திட்டம் 1959 இல் ஆரம்பித்து 1963 வரை தொடர்ந்தது. மேர்க்குரி-அட்லஸ் 6 என்ற விண்கலம் பெப்ரவரி 20, 1962 இல் விண்ணுக்கு முதன் முதலில் அமெரிக்காவின் மனிதனைக் கொண்டு சென்றது.
மேர்க்குரித் திட்டத்தின் மொத்தச் செலவு $1.5 பில்லியன் ஆகும்.
Remove ads
மனிதரற்ற பயணங்கள்
இத்திட்டம் மொத்தம் 20 தானியங்கிகளைக் கொண்டு சென்றது. இவற்றில் சிலவே வெற்றிகரமானதாக இருந்தன. இவற்றில் பின்வரும் 4 பயணங்களில் மனிதரல்லாத விலங்குகள் கொண்டு செல்லப்பட்டன.
- லிட்டில் ஜோ 2 (சாம் என்ற குரங்கு டிசம்பர் 4, 1959 இல் 85 கி.மீ. உயரம் கொண்டு செல்லப்பட்டது)
- லிட்டில் ஜோ 1B (மிஸ் சாம் என்ற குரங்கு ஜனவரி 21, 1960 15 கி.மீ. உயரம் சென்றது).
- மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 (ஹாம் என்ற சிம்பன்சி ஜனவரி 31, 1961 இல் கொண்டு செல்லப்பட்டது).
- மேர்க்குரி-அட்லஸ் 5 (ஏனொஸ் என்ற சிம்பன்சி நவம்பர் 29, 1961 இல் பூமியை 2 தடவைகள் சுற்றி வர அனுப்பப்பட்டது).
Remove ads
மனிதப் பயணங்கள்
- மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 3 - அலன் ஷெப்பர்ட், மே 5, 1961 இல் மொத்தம் 15 நிமி 28 செக் நேரம் விண்வெளியில் இருந்தார்.
- மேர்க்குரி-அட்லஸ் 6 - ஜோன் கிளென், பெப்ரவரி 20, 1962 இல் 4 மணி 55 நிமி 23 செக் நேரம் பூமியைச் சுற்றிய முதல் மனிதர் (3 தடவை சுற்றினார்).
- மேர்க்குரி-அட்லஸ் 7 - ஸ்கொட் கார்பென்ரர், மே 24, 1962 இல் 4 மணி 56 நிமி 15 செக் நேரம் 3 தடவை பூமியைச் சுற்றினார்.
- மேர்க்குரி-அட்லஸ் 8 - வொல்லி ஷீர்ரா, அக்டோபர் 3, 1962 இல் 9 மணி 13 நிமி 11 செக் நேரம் 6 தடவை பூமியைச் சுற்றினார்.
- மேர்க்குரி-அட்லஸ் 9 - கோர்டன் கூப்பர், மே 15, 1963 இல் 1 நாள் 10 மணி 19 நிமி 49 செக் நேரம் 22 தடவை பூமியைச் சுற்றினார்.
Remove ads
வெளி இணைப்புகள்
- மேர்க்குரித் திட்டம் பரணிடப்பட்டது 2001-10-31 at the வந்தவழி இயந்திரம்

Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads