மேவாட்
அரியானாவிலுள்ள ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேவாட் ( Mewat ) என்பது வடமேற்கு இந்தியாவில் உள்ள அரியானா, இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களின் வரலாற்றுப் பகுதியாகும்.[1][2] இப்பகுதி தோராயமாக கி.மு 5 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பண்டைய மச்ச இராச்சியத்துடன் ஒத்துள்ளது. இந்தியின் அரியான்வி மற்றும் இராசத்தானி பேச்சுவழக்குகளின் சிறிய மாறுபாடான மேவாட்டி பேச்சுவழக்கு இப்பகுதியின் கிராமப்புறங்களில் பேசப்படுகிறது. மேவாட் கரானா என்பது இந்தியப் பாரம்பரிய இசையின் ஒரு தனித்துவமான பாணியாகும்.
Remove ads
புவியியல்
மேவாட் பிரதேசமானது, தற்கால அரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கீழ்கண்ட மாவட்டப் பகுதிகளைக் கொண்டது. ---அரியானா மாநிலப் பகுதிகள்
---இராஜஸ்தான் மாநிலப் பகுதிகள்
---உத்தரப் பிரதேச மாநிலப் பகுதிகள்
வாலி-இ-மேவாத்
வாலி-இ-மேவாத் என்ற பட்டத்தை மேவாட் மாநிலத்தின் கன்சாடா மேவாட்டி ஆட்சியாளர்கள் 1372 முதல் 1527 வரை பயன்படுத்தினர். அவர்கள் மேவாட்டை ஒரு சுதந்திர நாடாக ஆட்சி செய்தனர். 1372 ஆம் ஆண்டில், சுல்தான் பிரூசு சா துக்ளக், கோட்லா கோட்டையின் அரசன் நகர் கான் மேவதிக்கு, மேவாட்டின் இறையாட்சியை வழங்கினார். அவர் மேவாட்டில் ஒரு பரம்பரை அரசை நிறுவி வாலி-இ-மேவாத் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார். பின்னர் அவரது சந்ததியினர் மேவாட்டில் தங்கள் சொந்த இறையாண்மையை உறுதிப்படுத்தி 1527 வரை அங்கு ஆட்சி செய்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, அவர்கள் அல்வார் மாநிலத்தின் கீழ் மற்றும் பரத்பூர் மாநிலத்திற்கு உட்பட்டிருந்தனர். 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு இப்பகுதி பிரித்தானிய ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்
1947 ஆம் ஆண்டு அல்வர் மாவட்டம் மற்றும் பரத்பூர் மாவட்டம் ஆகிய இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மியோ பழங்குடியினர் இடம்பெயர்ந்தனர். பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் குர்கானுக்கு மாறினார்கள், பலர் பாக்கித்தானுக்குச் சென்றனர். பரத்பூரின் இளவரசர் பச்சு சிங் இந்த இன அழிப்புச் செயலில் முக்கியப் பங்கு வகித்தார். முன்னதாக கத்துமர், நாட்பாய், கும்ஹர், கெர்லி, புசாவர், கலிங்கு மற்றும் மஹ்வா வரை மியோ மக்கள்தொகை அதிகமாக இருந்தது. அல்வார் மற்றும் பரத்பூரில் மீயோக்களின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துள்ளது. இருப்பினும் பல பழைய மசூதிகள் இன்றும் உள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads