மைக்கேல் மேசுட்லின்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மைக்கேல் மேசுட்லின் (Michael Maestlin) ( மாசுட்லின், மோசுட்லின், அல்லது மோயெசுட்லின் எனவெல்லாம் வழங்குபவர் ) (30 செப்டம்பர் 1550, கோப்பிங்கன் - 20 அக்தோபர் 1631, தூபிங்கன்) ஒரு செருமானிய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் யோகான்னசு கெப்லரின் பேராசிரியர் ஆவார்.

வாழ்க்கைப்பணி
இவர் தூபிங்கன் பல்கலைக்கழகத்தில் இறையியலும் கணிதவியலும் வானியலும்/கணியவியலும் (சோதிடமும்) கற்றார். (தூபிங்கன் ஊர்ட்டெம்பர்கு டச்சியின் ஒருபகுதி ஆகும்.) இவர் 1571 இல் magister ஆகப் பட்டம் பெற்றார். 1576 இல் பேக்நாங்கில் உலூதரிய deacon ஆனார். தொடர்ந்து தன் ஆய்வுகளில் ஊடுபட்டுவந்தார்.
இவர் 1580 இல் ஐடெல்பர்கு பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியர் ஆனார். பின்னர் தூபிங்கன் பல்கைக்கழகத்திலும் பேராசிரியர் ஆனார். இங்கு இவர் 1583 இல் இருந்து 47 ஆண்டுகள் கல்வி பயில்வித்தார்.இவர் 1582 இல் வானியலுக்கான மக்கள் அறிமுக நூலை எழுதினார்.
இவரது மாணவர்களில் யோகான்னசு கெப்லரும் (1571-1630) ஒருவராவார்.[1] இவர் முதன்மையாக சூரியக் குடும்பத்தின் புவிமையக் கோட்பாட்டை கற்பித்து வந்தாலும் இவர்தான் முதலில் நிகோலாசு கோப்பர்னிக்கசுவின் சூரிய மையக் கோட்பாட்டை ஏற்று, பாடம் நட்த்தியவர் ஆவார்.[1] இவர் தொடர்ந்து கெப்லருடன் தொடர்புகொண்டு கோப்பர்னிக்கசு பார்வையை ஏற்கவைத்துள்ளார். இவரால்தான் கலீலியோவும் கோப்பர்னிக்கசு பார்வையை ஏற்றுள்ளார்.[2]
மேசுட்லின் கெப்லருக்கு 1597 இல் எழுதிய கடிதத்தில் [3] " 0.6180340" இன் பதின்மமாகத் தலைக்கீழ் தங்க விகித்த்தைக் குறிப்பிடுவதே அறியப்பட்ட முதல் தங்க விகிதக் கணக்கீடு ஆகும்.
Remove ads
குறிப்பிடத்தக்க வானியல் நோக்கீடுகள்
தகைமை
- குறுங்கோள் 11771 மேசுட்லின் 1973 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
- நிலாவின் மேசுட்லின் குழிப்பள்ளம்
- நிலாவின் மேசுட்லின் கால்வாய்கள்
வளிமக்கலனில் ஐந்து வாரங்கள் எனும் யூல்சு வர்னேவின் அறிபுனைவில் வரும் ஜோவே எனும் வேலைக்கரன் பாத்திரம்,கெப்லரின் பேராசிரியரான மோஎசுட்லினுக்கு இணையாக வியாழனின் இயற்கைத் துணைக்கோள்களையும் வெறுங்கண்ணால் பார்ப்பதாகவும் துருவ விண்மீனின் 14 விண்மீன்களை அதாவது ஒன்பதாம் பொலிவுள்ள எட்டவுள்ள விண்மீனையும் சேர்த்து, விண்மீன்களை வெறுங்கண்ணால் எண்ணுவதாகவும் கூறப்படுகிறது"
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads