மைக்ரோமீட்டர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோ மீட்டர் (Micrometer) ஆகும். ஒரு மில்லி மீட்டரின் ஓர் ஆயிரத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோ மீட்டர் ஆகும். மாந்தர்களின் தலை முடியானது சற்றேறக் குறைய 80 மைக்ரோ மீட்டர் இருக்கும். பட்டுநூல் சுமார் 15 மைக்ரோ மீட்டர் இருக்கும். ஒரு மாந்தப் பெண்ணின் கருவுறும் முட்டை சுமார் 500 மைக்ரோ மீட்டர் இருக்கும். நுண்ணுயிர்கள் 1-10 மைக்ரோ மீட்டர் பருமன் இருக்கும். மாந்தர்களின் சிவப்பணு சுமார் 6-8 மைக்ரோ மீட்டர் இருக்கும்.
கிரேக்க எழுத்தாகிய µ (= மியூ) என்பதை மைக்ரோ என்னும் சொல்லைக்குறிக்கும் முன்னொட்டாக இடுவர். எடுத்துக்காட்டாக மைக்ரோ மீட்டர் என்பதை µm எனக் குறிப்பர். µ என்பதை யூனிக்கோடில் U+00B5 என்றும் மீசுட்டு மொழியில் (HTML) µ
என்றும் குறிப்பர். மைக்ரோ மீட்டர் என்பதை மைக்ரான் என்று 1879 ஆம் ஆண்டுமுதல் 1967 ஆண்டுவரை அழைத்து வந்தனர் ஆனால் இன்று இது செல்லாத(அறிவியல் ஏற்பு அற்றப்) பெயராகக் கருதப்படுகின்றது.
சுருக்கமாக:
- ஒரு மைக்ரோ மீட்டர் = 1×10-6 மீட்டர்
- ஒரு மைக்ரோ மீட்டர் = 1×10-3 மில்லி மீட்டர்
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads