மைசீனியக் கிரேக்கம்

From Wikipedia, the free encyclopedia

மைசீனியக் கிரேக்கம்
Remove ads

மைசீனியக் கிரேக்கம் (Mycenaean Greece) பண்டைக் கிரேக்கத்தில் (கிமு 1600 - 1100) வெண்கலக் காலத்தின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கிறது. இக்காலத்திலேயே கிரேக்கத் தலை நிலத்தில், சிறப்பு வாய்ந்த நாடுகள், நகர நிறுவனங்கள், கலை ஆக்கங்கள், எழுத்து முறைமைகள் என்பவற்றோடு கூடிய முதல் உயர்நிலை நாகரிகம் நிலவியது.[1] அக்காலத்தில் அங்கு உருவான ஆதிக்க மையங்களுள் பைலொசு, தீரின்சு, மிடியா, ஓர்க்கோமெனசு, தேபசு, மத்தியக் கிரேக்கப் பகுதியில் ஏதென்சு, தெசாலிப் பகுதியில் லொல்கோசு என்பன குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆர்கோலிசு பகுதியில் இருந்த மைசீனியாதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தளமாகக் கருதப்படுகிறது. இதனால்தான் இங்கிருந்தத நாகரிகம் மைசீனியக் கிரேக்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மைசீனியக் கலாச்சாரம் மற்றும் அக்கலாச்சாரத்தின் ஆதிக்கம் காரணமாக புதிய குடியிருப்புகளான ஏகியன் தீவுகளில் எபிரசும் [2][3] மாசிடோணியாவும்[4][5] தோன்றின. அனத்தோலியா கடலோரப் பகுதியில் இலெவண்ட்டு[6], சைப்ரசு[7], இத்தாலி [7] போன்ற நாகரிகங்கள் தோன்றின.

விரைவான உண்மைகள் மைசீனியக் கிரேக்கம், காலப்பகுதி ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads