மைமன்சிங் மாவட்டம்

வங்காளதேசத்தின் மைமன்சிங் கோட்டத்திலுள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

மைமன்சிங் மாவட்டம்
Remove ads

மைமன்சிங் மாவட்டம் (Mymensingh district) (Bengali: ময়মনসিংহ) தெற்காசியாவின் வங்காளதேசத்தின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிட நகரம் மைமன்சிங் நகரம் ஆகும்.

Thumb
வங்காளதேசத்தில் மைமன்சிங் மாவட்ட்டத்தின் அமைவிடம்

மாவட்ட எல்லைகள்

இம்மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் காரோ மலைகளும், தெற்கில் காஜிப்பூர் மாவட்டமும், கிழக்கில் நேத்திரகோணா மாவட்டம் மற்றும் கிஷோர்கஞ்ச் மாவட்டங்களும், மேற்கில் செர்பூர் மாவட்டம், ஜமால்பூர் மாவட்டம் மற்றும் தங்கயில் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.[1]

நிர்வாகம்

Thumb
மைமன்சிங் மாவட்ட வரைபடம்

மைமன்சிங் மாவட்டம் 1787-இல் நிறுவப்பட்டது. நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் பாலுக்கா, திரிஷால், ஹலுகாட், முக்தாகச்சா, தோபௌரா, புல்பாரியா, கப்பர்கான், கௌரிப்பூர், ஈஸ்வர்கஞ்ச், நந்தாய்ல், புல்பூர், தாரகந்தா என பனிரெண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது

உள்ளாட்சி அமைப்புகள்

மேலும் வலுக்கா, கௌரிபூர், முக்தாகாச்சா, நந்தயில், புல்பாரியா, ஈஸ்வர்கஞ்ச், புல்பூர், கப்பர்கான், மைமன்சிங் சதர் மற்றும் திரிஷல் என பத்து நகராட்சி மன்றங்கள் உள்ளது. மேலும் மைமன்சிங் மாவட்டத்தில் 146 ஊராட்சி ஒன்றியங்களும், 2,692 கிராமங்களும் கொண்டுள்ளது.

Remove ads

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மைமன்சிங் மாவட்ட மக்கள் தொகை 51,10,272 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 25,39,124 ஆகவும் மற்றும் பெண்கள் 25,71,148 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் நூறு ஆண்களுக்கு 99 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1163 வீதம் உள்ளனர். எழுத்தறிவு 43.50% ஆகும்.

மைமன்சிங் மாவட்ட அஞ்சல் சுட்டு எண் 2200 ஆகும். இம்மாவட்டத்தில் பதினொன்று நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் உள்ளது. [2]

புவியியல்

4363.48 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மைமன்சிங் மாவட்டத்தின் வடக்கில் காரோ மலைக் காடுகளும், தெற்கில் சமவெளிகளும் கொண்டது. மாவட்டத்தின் சராசரி தட்ப வெப்பம் 12 முதல் 33 ° செல்சியசும், சராசரி ஆண்டு மழைப் பொழி 2,174 மில்லி மீட்டர் ஆகும். இம்மாவட்டத் தலைமையிட நகரமான மைமன்சிங் பழைய பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் உள்ளது.

பொருளாதாரம்

மைமன்சிங் மாவட்டத்தில் பழைய பிரம்மபுத்திரா ஆறு, பனார் ஆறு, தானு ஆறு, கங்ஷா ஆறு, ஜெனாய் ஆறு, தாளேஷ்வரி ஆறு மற்றும் மொஹாரி முதலிய ஆறுகள் பாய்வதால் நெல், சணல், கோதுமை, கரும்பு, தானியங்கள், வெற்றிலை, கத்தரிக்காய், காளிபிளவர், காய்கறிகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படுகிறது.

மைமன்சிங் நகரம்

பிரம்மபுத்திரா ஆற்றின் மேற்கு கரையில் உள்ள மைமன்சிங் நகரத்தில் வங்காள தேச வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளது.[3] மேலும் ஜாதிய கபி காஜி நஸ்ரூல் இசுலாம் பல்கலைக்கழகம், மைமன்சிங் பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ஆனந்த மோகன் கல்லூரி மற்றும் இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் உள்ளது.[4]

தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், மைமன்சிங், மாதம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads