மையக்கோணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடிவவியலில் மையக்கோணம் (central angle) என்பது கோணத்தின் உச்சி ஒரு வட்டத்தின் மையமாகவும் கோணத்தின் கரங்கள் இரண்டும் வட்டத்தின் பரிதியின் மீதமையும் இரு புள்ளிகள் வழியாக செல்லுமாறும் அமைந்துள்ள ஒரு கோணமாகும். இந்த இருபுள்ளிகளும் அவ்வட்டத்தின் ஒரு வில்லை உருவாக்குகின்றன. இந்த வட்டவில்லானது வட்டமையத்தில் தாங்கும் கோணமாக இந்த மையக்கோணம் அமையும்.


ஒரு வட்டவில் வட்டப்பரிதியின் மேல் அமையும் எந்தவொரு புள்ளியிலும் தாங்கும் கோணங்கள் அனைத்தும் சமமாகவும் இதே வட்டவில் மையத்தில் தாங்கும் கோணத்தில் பாதியாகவும் இருக்கும்.
வட்டத்தின் சுற்றளவில் காற்பகுதி அதாவது கால் வட்டத்தின் மையக்கோணம் (ரேடியனில்) அல்லது 90 பாகைகள்.
வட்டத்தின் சுற்றளவில் அரைப்பகுதி அதாவது அரைவட்டத்தின் மையக்கோணம் (ரேடியனில்) அல்லது 180 பாகைகள்.
வட்டத்தின் முழுச்சுற்றளவு முழுவட்டத்தின் மையக்கோணம் (ரேடியனில்) அல்லது 360 பாகைகள்.
Remove ads
வெளி இணைப்புகள்
- Central Angle of an Arc definition பரணிடப்பட்டது 2006-10-30 at the வந்தவழி இயந்திரம் With interactive animation
- Central Angle Theorem described With interactive animation
- Inscribed and Central Angles in a Circle
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads