முவ்வா

ஆந்திராவிலுள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia

முவ்வா
Remove ads

முவ்வா (Movva) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது மச்சிலிப்பட்டணம் வட்டத்தில் முவ்வா மண்டலத்தில் அமைந்துள்ளது. இது ஆந்திரப் பிரதேச தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருக்கும், மண்டலத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றாகும்.[2][3] இக் கிராமமானது 17 ஆம் நுற்றாண்டில் புகழ்பெற்ற தெலுங்கு கவிஞர் சேத்ரையாவின் (1600-1680) சொந்த கிராமமாகும். உண்மையில், சேத்ரையா தனது சொந்த கிராமத்துடனும், இங்குள்ள பிரதான கோவிலின் கிருஷ்ணர் தெய்வத்துடனும் மிகுந்த பற்று கொண்டிருந்ததால், அவர் எழுதிய ஒவ்வொரு இசையமைப்பின் முடிவிலும் தோன்றும் அவரது 'நாம் டி ப்ளூம்' அல்லது முத்திரை (கையொப்பம்) "முவ்வா கோபாலா" என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமம் எஸ். எம்.கே. மாவட்ட பரிசத் உயர் நிலைப் பள்ளி, சேத்ரையா இளையோர் கல்லூரி , வி.எச். ஆர். இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி போன்ற அரசு நிறுவனங்களுக்கு பெயர் பெற்றது. மொவ்வா மண்டலத்தில் உள்ள கிரமங்களில் ஒன்றான குச்சிப்புடி கிராமத்தில் குச்சிப்புடி நடனம் பெயர் பெற்றது.

விரைவான உண்மைகள் முவ்வா, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads