மோசிக்கரையனார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மோசிக்கரையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 260.

மோசிக்கரை என்பது ஓர் ஊர். பாடலைப் பார்க்கும்போது அது கடலின் ஓரத்தில் இருந்ததை உணரமுடிகிறது.

பாடல் சொல்லும் செய்தி

  • நெய்தல் திணை
  • எற்பாடு பொழுது நெய்தல் திணைக்கு உரியது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள பாடல் இது. எற்பாடு = பகல் 2 மணி முதல் 6 மணி வரையில் உள்ள காலம்.

தோழி சொல்லத் தொடங்குகிறாள். தலைவி தொடர்கிறள். அவன் 'அன்பிலாளன்' (அன்பு இல்லாதவன்). அவனை என் அறிவு விரும்புகிறது. எற்பாடு பொழுது முடிந்து அரைநாள் வரப்போகிறது.

எற்பாடு பொழுதில் நிகழ்வன

மண்டிலம் - பொழுதின் வெயில் தணியும்.
மாலை - மாலைப்பொழுது தன் நிறத்தைக் காட்டும்.
வண்டினம் - வண்டினம் மலரில் உண்ணும்.
குருகி இனம் - கண்டல் மரத்திற்கு வந்து ஒலிக்கும்.
திமில் - மீன் மிடிக்கச் செல்லும் திமில் கரைக்கு வந்துவிட்டதால் கடல்பாட்டு அவிந்துகொண்டிருக்கும்.
செக்கர் - வானம் செவ்வானமாக மாறும்.
அன்றில் - அன்றில் மணல்மேட்டுப் பனைமடலுக்குச் செல்லும்.
கழிமலர் - உப்பங்கழியில் பூக்கும் பூக்கள் முகத்தை மூடிக் கூம்பும்.
புன்னை - வீட்டுமனையில் வளர்க்கப்பட்ட புன்னை பூத்துப் புதுமணம் வீசும்.

இப்படி எற்பாடு முடிந்து மாலைக்காலம் வருகிறதே. என்ன செய்வேன்? என்கிறாள் தலைவி.
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads